Omicron : ’ஓமிக்ரோன்’ வைரசில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி…? நிபுணர்கள் கொடுத்த ஆலோசனை...
கொரோனாவின் மற்றொரு வேறுபாடான ‘ஓமிக்ரோன்’ வைரஸ் தற்போது உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது.
தென்னாப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது இந்த வைரஸ். ஓமிக்ரான் வைரஸை பரிசோதித்த நிபுணர்கள், ‘இது கோவிட் 19 போல, அதிக அபாயம் கொண்டது அல்ல. மிகுந்த குறைந்த செயல்திறனையே இந்த வைரஸ் பெற்றுள்ளது’ என்கிறார்கள். ஓமிக்ரான் மாறுபாட்டின் அறிகுறிகள் மிகவும் லேசானவையாக இருக்கிறது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள். உதாரணமாக ஓமிக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவமனைக்கு செல்ல தேவை இல்லை. வீட்டில் இருந்தே சிகிச்சை மேற்கொள்ளலாம். அந்த அளவுக்கு வீரியம் குறைந்து காணப்படுகிறது.
இந்த வைரஸின் திரிபு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.ஆதிக்கம் செலுத்தும் டெல்டா மாறுபாட்டிலிருந்து, வேறுபட்ட அறிகுறிகளைக் கொண்டிருந்த ஏழு நோயாளிகளை பரிசோதித்ததில் இது தெரிய வந்துள்ளது. ஓமிக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் மிகவும் லேசான அறிகுறிகளையே கொண்டுள்ளார்கள் ‘ என்று தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவரும், மருத்துவருமான ஏஞ்சலிக் கோட்ஸி தெரிவித்து இருக்கிறார்.
டாக்டர் ஏஞ்சலிக் கோட்ஸி தடுப்பூசி பற்றிய ஆய்வுக்குழுவிலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிட் 19 மற்றும் டெல்டா வைரஸை போல ஓமிக்ரான் வைரஸ் ஆனது, வாசனை மற்றும் சுவை இல்லாமல் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதில்லை. எனவே ஓமிக்ரான் வைரஸ் பாதித்தவர்கள் வாசனை மற்றும் சுவையை இழப்பதில்லை என்று தெரிய வருகிறது.அதேபோல ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்படுவதில்லை.40 வயது மற்றும் அதற்கு கீழ் இருக்கும் வயதினரை இது பாதிக்கிறது.
ஓமிக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் பாதி பேர், தடுப்பூசி போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஓமிக்ரான் பாதித்தவர்களுக்கு முதல் இரண்டு நாட்களுக்கு கடுமையான உடல் சோர்வு மற்றும் தலைவலி ஏற்படுகிறது’ என்று கூறினார். தென்னாப்பிரிக்காவில் இதுவரை பரவலாக பாதித்திருக்கிறது ஓமிக்ரான் வைரஸ். இதுகுறித்து பேசிய ‘வைராலஜிஸ்ட்’ மார்க் வான் ரான்ஸ்ட், ‘ஓமிக்ரான் மாறுபாடு குறைவான நோய்க்கிருமியாக இருந்தாலும், அதிக தொற்றுநோயை பரப்பலாம்’ என்று எச்சரிக்கிறார்.
உலக சுகாதார நிறுவனமான WHO - இன் கூற்றுப்படி, டெல்டா உள்ளிட்ட பிற தொற்றுக்களை விட இந்த ஓமிக்ரான் வைரஸ் அதிக ஆபத்து உள்ளது. அதுமட்டுமின்றி, வேகமாக பரவக்கூடும் என்றும், இதனை சான்றுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ என்கிறது. இஸ்ரேலில் உள்ள ஹடாசா பல்கலைக்கழக மருத்துவமனையான, ஐன் கரேமின், கொரோனா வைரஸ் துறையின் தலைவரான பேராசிரியர் ட்ரார் மெஸோராச், ‘ இந்த புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ நிலை குறித்த அறிக்கைகள், நல்ல விதமாக இருக்கிறது.இது டெல்டா மாறுபாட்டுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் லேசான நோயாக இருக்கலாம். இது மற்ற கொரோனா தொற்றுக்களை விட மிகவும் குறைந்த பாதிப்பினை ஏற்படுத்தும்.
இதனை உலக அளவில் எளிதாக சமாளிக்கலாம்.புதிதாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மாறுபாடு ஓமிக்ரான் மற்ற வகைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் பரவக்கூடியதா அல்லது மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்துமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.இருப்பினும் மிகவும் குறைந்த பாதிப்பையே ஏற்படுத்தும் எனலாம்’ என்று கூறுகிறார். இங்கிலாந்தை சேர்ந்த நுண்ணுயிரியலாளர் மற்றும் பேராசிரியருமான காலும் செம்பில், ஓமிக்ரான் பாதிப்பு மிகுந்த லேசான அறிகுறிகளையே காட்டுகிறது.தடுப்பூசி போடுவதால் ஓமிக்ரான் தாக்குதலில் இருந்து மிகவும் எளிதாக தடுக்கலாம்..தடுப்பூசி போடுவதன் மூலம், ஓமிக்ரான் வைரஸில் இருந்து எளிதாக தற்காத்துக் கொள்ளலாம்’ என்று கூறுகிறார்.