அமெரிக்காவில் ஒஹிவோவில் உள்ள மதுபான பாரில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். ஒரே நாளில் இன்று 2-வது துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளதால் அமெரிக்காவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள கிளப்பில் மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுடத்தொடங்கினார். இந்த திடீர் தாக்குதலில் பாரில் இருந்த 9 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ விரைந்து மர்ம நபரை சுட்டுக்கொன்றனர்.

 

கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற இரண்டாவது துப்பாக்கிச்சூடு இதுவாகும். நேற்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், உள்ள வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர்கள் அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சராமாரியாகச் சுட்டனர். அந்தத் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தொடர் துப்பாக்கிச்சூட்டை அடுத்து பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.