Asianet News TamilAsianet News Tamil

துஷ்டபுத்தி அதிபருக்கும், ஏடாகூட ஜனாதிபதிக்கும் ஏற்பட்ட மன கசப்பு..!! உலகத்தையே மரணக்காடாய் மாற்றப்போகும் மூர்க்கத்தனம்..!!

ஏதேனும் விரோத நடவடிக்கைகளில் இறங்கினால்  அதைக்கண்டு உண்மையிலேயே நான் ஆச்சரியப்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார். 

now relationship break down  bit wen america and north koria  what will happen next
Author
Delhi, First Published Dec 10, 2019, 1:56 PM IST

வடகொரியாவுடன் அணு ஆயுத விவகாரத்தில் நல்ல முடிவு எட்டப்படும் என தான் இன்னும் நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு வட கொரியா பகிரங்கமான எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அமெரிக்கா இவ்வாறு வினையாற்றி உள்ளது.    உலகின்  நேரெதிர் துருவங்களாக விளங்கி வரும் அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்பும் - வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும்  கடந்த ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேசினார் அப்போது வடகொரியாவை அணு ஆயுதம் அற்ற நாடாக மாற்றுவது  தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் அணுவாயுதப் பேச்சுவார்த்தை தொடங்கி பேசினர்.  ஆனால் அதில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை . 

now relationship break down  bit wen america and north koria  what will happen next

பின்னர் இரண்டாவது முறையாக கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாமில் சந்தித்த  பேச்சு வார்த்தையிலும் பலன் இல்லை. இந்நிலையில்  வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் வடகொரிய எல்லையில் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டனர் .  இதனால் கோபமடைந்த வடகொரியா அமெரிக்க மற்றும் தென் கொரியாவை எச்சரிக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி மிரட்டியது.  இதனால்  அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே மீண்டும்  மோதல்  ஏற்படும்  சூழல் உருவானது .  ஆனால்  வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும்   எந்த பாதிப்பும் இல்லை என அமெரிக்கா கூறிவந்தது .

now relationship break down  bit wen america and north koria  what will happen next

ஆனால் அமெரிக்கா தன் எதேச்சதிகார  போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் அணுஆயுத பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இருக்காது என அதிரடியாக தெரிவித்துள்ளார் .  இந்நிலையில் அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சுவார்த்தைக்கான கதவை மூடுவதாக வடகொரியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கான கதவு மூடப்படுவதாக அறிவித்த சிலமணி நேரத்தில் அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா மிக முக்கியமான அணு ஆயுதத்தை சோதித்து ஒட்டுமொத்த வல்லரசுகளையும் அதிர வைத்துள்ளது.  அமெரிக்கா கொண்டு வந்துள்ள  குறிப்பிடத்தக் பொருளாதார தடைகளை நீக்கும் வகையில் புதிய ஒப்பந்தத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் கொண்டுவர வேண்டும் இல்லை என்றால் வடகொரியா புதிய பாதையை கையிலெடுக்க வேண்டி வரும் என  அமெரிக்காவுக்கு வட கொரியா  பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஆனால் இதுபற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல்  மவுனம் காத்து வந்த அமெரிக்கா, 

now relationship break down  bit wen america and north koria  what will happen next

வடகொரியா எடுத்துள்ள முடிவு குறித்து ஜனாதிபதி   ட்ரம்ப் வாய்திறந்துள்ளார்.  அதில்,  அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்கா வடகொரியா இடையே ஒரு உடன்பாடு எட்டப்படும் என தான் இன்னும் நம்புவதாகவும்,  அதேநேரத்தில் வடகொரியா  ஏதேனும் விரோத நடவடிக்கைகளில் இறங்கினால்  அதைக்கண்டு உண்மையிலேயே நான் ஆச்சரியப்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.  இந்த விவகாரத்தில்  வடகொரியா என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் . 
 

Follow Us:
Download App:
  • android
  • ios