ஆப்கான் அதிபரை போல கோழைத்தனமாக வெளியேற போவதில்லை.. எனக்கு தேவை ஆயுதங்கள் தான்.. பயணம் அல்ல.. உக்ரைன் அதிபர்.!
ஆப்கான் அதிபரை போல உக்ரைன் அதிபரும் அதேபோல் வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை வைத்தது. எந்த நேரத்திலும் ரஷ்யா படைகளால் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கொலை செய்யப்படலாம் என்ற கூறப்பட்டு வருகிறது. இதனால் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கியை உக்ரைனை விட்டு வெளியேறும் படி அமெரிக்கா கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
நாட்டை விட்டு வெளியேற உதவ தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறியதற்கு நாட்டை விட்டு வெளியேற போவதில்லை. எனக்கு தேவை ஆயுதங்கள் தான் பயணம் அல்ல என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பதிலளித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை கடந்த ஆண்டு தாலிபான் படைகள் பிடித்தது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில் அங்கு தாலிபான் படைகள் மீண்டும் ஆட்சியை பிடித்தது. காபூல் எல்லைக்குள் தாலிபான் படைகள் நெருங்கிய நிலையில் அப்போதைய ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பணத்துடன் ஆப்கானிஸ்தானில் இருந்து ஹெலிகாப்டரில் தப்பித்து சென்றார்.
அதேபோல், ரஷ்யா உக்ரைன் மீது உக்கரமாக 3வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. முக்கிய தலைநகரங்களை கைப்பற்றி வரும் நிலையில் உக்ரைன் பயந்துபோய் பின்வாங்காமல் எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது. முக்கிய தலைநகரங்களை கைப்பற்றி வரும் நிலையில் உக்ரைன் பயந்துபோய் பின்வாங்காமல் எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் இன்னும் சில நாட்களில் உக்ரைன் படைகளை வீழ்த்தி கீவ் பகுதியை ரஷ்ய படைகள் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஆப்கான் அதிபரை போல உக்ரைன் அதிபரும் அதேபோல் வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை வைத்தது. எந்த நேரத்திலும் ரஷ்யா படைகளால் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கொலை செய்யப்படலாம் என்ற கூறப்பட்டு வருகிறது. இதனால் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கியை உக்ரைனை விட்டு வெளியேறும் படி அமெரிக்கா கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
உக்ரைனை விட்டு உடனே வெளியேறுங்கள், சிறப்பு விமானம் ஏற்பாடு செய்கிறோம். நீங்கள் தப்பித்து விடுங்கள் என்று செலென்ஸ்கி கூறியுள்ளார். ஆனால் இந்த கோரிக்கையை செலென்ஸ்கி ஏற்க மறுத்துவிட்டார். நான் நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று அவர் அமெரிக்கா பாதுகாப்பு துறை அனுப்பிய மெசேஜுக்கு பதில்அளித்துள்ளார். எங்களுக்கு தேவை ஆயுதம்தான். பயணம் இல்லை. நான் வர மாட்டேன் என்று கூறியுள்ளார்.