2024-ல் போர், பசி, காலநிலை பேரழிவுகள்.. நெருங்கும் அழிவுகாலம்? நாஸ்ட்ராடாமஸின் பகீர் கணிப்புகள்..
2024-ம் ஆண்டில் கடல் போர்கள் நடக்கும் என்றும் பசி, பஞ்சம் ஏற்படும் என்றும் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
16ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பிரெஞ்சு ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸ், அழிவின் தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுகிறார், 2024 ஆம் ஆண்டிற்கான சில பயங்கரமான கணிப்புகளை வெளிப்படுத்தி உள்ளது. 1555 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட Les Propheties என்ற தனது புத்தகத்தில், 2024 ஆம் ஆண்டு கடல் வழியான போர்கள், அரச குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் மற்றும் ஒரு பெரிய மனிதாபிமான பேரழிவு உள்ளிட்ட சில புதிய உலகளாவிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய உலகளாவிய பொருளாதார எழுச்சிகள் அன்றாட வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ரஷ்யா-உக்ரைன் மோதல் மற்றும் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் ஆகிய இரண்டு தொடர்ச்சியான மோதல்களின் தீங்கு விளைவிக்கும் தாக்கங்களால் உலகம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற நிச்சயமற்ற நிலை காரணமாக மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஹிட்லரின் எழுச்சி மற்றும் கென்னடியின் படுகொலை போன்ற முக்கிய நிகழ்வுகளை முன்னறிவித்த வரலாற்றை நோஸ்ட்ராடாமஸ் கொண்டுள்ளார். இந்த நிலையில் 2024-ல் சீனா ஒரு மேலாதிக்க சக்தியாக எழுச்சி பெறுவதை அவர் குறிப்பிட்டுள்ளார். சீனா மேலும் எழுச்சி பெற்று உலக சக்தியாக உருவெடுக்கும் என்றும், சீனா போர் அல்லது கடல் போரில் ஈடுபடலாம் என்றும் அவர் கணித்துள்ளார். தற்போது சீனா - தைவான் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் இந்த கணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது
இங்கிலாந்தின் அரச குடும்பம், எதிர்காலத்தில் கூடுதல் சவால்களை சந்திக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்றாம் சார்லஸ் மன்னரைக் குறிப்பதாக சிலர் கருதுகின்றனர். ஹாரி புதிய மன்னராக முடிசூட்டப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
2024 இல், காலநிலை மாற்றம் மோசமாகிவிடும் என்றும். வெப்ப அலைகள், காட்டுத்தீ மற்றும் வறட்சி போன்ற அதிக தீவிர வானிலை நிகழ்வுகளை அவர் கணித்துள்ளார். உலகளாவிய பசி, பட்டினி, பஞ்சம் ஆகியவை அதிகரிக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.
இந்திய பயணிகள் கூகுளில் அதிகம் தேடிய 10 சுற்றுலா தலங்கள் இவை தான்.. முழு பட்டியல் இதோ..
மேலும், போப் பதவியில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அவர் கணித்துள்ளார். வயதான போப்பின் மரணம் குறித்தும் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவதைக் கணித்துள்ளார். போப் பிரான்சிஸ் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது எனினும் புதிய போப்பின் அதிகாரம் அல்லது கத்தோலிக்க திருச்சபைக்குள் குறையலாம் என்றும் என்று அவர் கணித்துள்ளார்.
ஹிட்லரின் எழுச்சி, ஜே.எஃப்.கே படுகொலை, 9/11 மற்றும் கோவிட் தொற்றுநோய் போன்ற முக்கிய வரலாற்று நிகழ்வுகளை நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..