வடக்கு மியான்மரில் பயங்கர நிலச்சரிவு.. தோண்டும் இடமெல்லாம் மனித உடல்கள் - அதிர்ச்சியில் மீட்புக்குழு!
வடக்கு மியான்மரில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கிய மக்களை காப்பாற்ற மீட்புக் குழுக்கள் முழுவீச்சில் பணிசெய்து வருகின்றனர். கடந்த வார இறுதியில் ஜேட் சுரங்கத்திற்கு அருகில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவைத் தொடர்ந்து, அங்கு நடந்த மீட்பு பணிகளில் இதுவரை 22 பேரின் உடல்களைக் கண்டுபிடித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதுவரை 42 பேர் காணவில்லை என்றும், அவர்களில் என்று பலர் சுரங்கத்திற்கு அருகில் ஜேட் துண்டுகளை தேடிச்செல்பவர்கள் என்றும் உள்ளுர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. Jade (ஜேட்) என்பது ஆபரணங்களில் பொருத்தப்படும் ஒரு வகை கனிமமாகும்.
கச்சின் மாநிலத்தில் உள்ள Hpakant என்ற இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து ஏற்பட்டது, அங்கு தோண்டப்பட்ட மண் மற்றும் இடிபாடுகளின் ஒரு பெரிய குவியல் சரிந்து, அருகிலுள்ள ஏரிக்குள் மக்களை இழுத்துச் சென்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.
சிங்கப்பூர் டிராவல் எக்ஸ்போ 2023!, பயணத் தேர்வில் ஐரோப்பிய நாடுகள் முதலிடம்!
பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர், பலர் படகுகளில் பயணம் செய்து, அங்கு மாயமான மக்களை தேடி வருகின்றனர். அங்கு பெய்து வரும் "இடைவிடாத மழையின் காரணமாக, நிலம் மிகுந்த இலகுவாகி, அது தேடுதல் பணிகளை தாமதப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Hpakant அதன் ஏராளமான ஜேட் வளங்களுக்காக பெயர் பெற்ற நிலையில், ஆசியாவின் மிக மோசமான சுரங்கப் பேரழிவுகளின் தளமாகவும் அறியப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது, இதேபோன்ற ஒரு விபத்தில் கடந்த 2020ம் ஆண்டு சுமார் 170 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.
மியான்மர், உலகில் புழக்கத்தில் உள்ள சுமார் 90 சதவீத ஜேட் கனிமத்தின் உற்பத்தி இடமாக திகழ்கிறது. சீனா பெரிய அளவில் மியான்மரில் இருந்து அந்த கனிமத்தை பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொழில் மூலம் மியான்மரின் ஆளும் இராணுவம் மற்றும் அதன் வணிக கூட்டாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் டாலர்கள் பெற்றுத்தருகின்றது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.