தென் கொரியாவிடம் மனம் உருகி மன்னிப்பு கேட்டார் வடகொரிய அதிபர்..!! சர்வாதிகாரி கிம் ஜாங் உன்னின் மனித நேயம்..!!
வடகொரிய நீர்ப்பரப்பில் அவர் சட்டவிரோதமாக நுழைந்ததாக பாதுகாப்பு படையினரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனாலும் இந்த அவமானகரமான சம்பவம் நடந்திருக்க கூடாது, என கிம் ஜாங் உன் அதில் குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது.
தங்கள் நாட்டு ராணுவத்தால் தென் கொரிய நாட்டு அரசு ஊழியர் சுட்டுக் கொல்லப் பட்டதுடன், அவர் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியுள்ளதாக தென் கொரியா தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து கிம் ஜாங் உன் தென்கொரிய அதிபர் மூன் ஜேவுக்கு எழுதிய கடிதத்தில் துரதிர்ஷ்டவசமான, மிகவும் அவமானகரமான இந்த சம்பவம் நடந்திருக்க கூடாது என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளதாக, தென்கொரியா கூறியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தென் கொரியாவின் மீன்வளத் துறையை சேர்ந்த ஊழியர் ஒருவர், யோன் பியோங் தீவின் மேற்கு எல்லைக்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவர் மாயமானார். பின்னர் 24 மணி நேரம் கழித்து அந்த ஊழியர் வடகொரிய கடல் பக்கம் கண்டெடுக்கப்பட்டதாக தென்கொரியா கூறியது, முன்னதாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தென்கொரிய ஊழியரை வட கொரிய பாதுகாப்பு படையினர் படகில் வைத்து மணிக்கணக்கில் விசாரித்ததாகவும், ஆறு மணி நேரத்திற்குப் பிறகு அவரை துப்பாக்கியால் 10 ரவுண்டுகள் சுட்டுக் கொன்றதாகவும், பின்னர் அவர் மீது பெட்ரோல் ஊற்றி அவரை எரித்ததுடன் அவரை தண்ணீரில் தூக்கி வீசியதாகவும் தென்கொரியா கூறியுள்ளது.
இக் கொடூரச் செயலில் ஈடுபட்ட வட கொரிய வீரர்கள் அனைவரும் பிபிஇ கிட் உடை அணிந்து இருந்ததாகவும் தென்கொரியா கூறியுள்ளது. ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே பகை புகைந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த கொடூர சம்பவத்தால், இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது. தனது நாட்டு குடிமகனை வடகொரிய பாதுகாப்பு படையினர் கொன்றது தென்கொரியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எப்போது வேண்டுமானாலும் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடிக்கலாம் என்ற சூழல் ஏற்பட்ட நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென் கொரிய அதிபர் மூன் ஜேவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் கொரோனா வைரஸ் நெருக்கடியில் தென்கொரியர்களுக்கு உதவுவதற்கு பதிலாக தென்கொரிய பிரஜையை வடகொரிய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதுடன், அவரை தீயிட்டு கொளுத்தி உள்ளனர்.
வடகொரிய நீர்ப்பரப்பில் அவர் சட்டவிரோதமாக நுழைந்ததாக பாதுகாப்பு படையினரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனாலும் இந்த அவமானகரமான சம்பவம் நடந்திருக்க கூடாது, என கிம் ஜாங் உன் அதில் குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று காரணமாக எல்லையை மூடியுள்ள வடகொரியா வைரஸ் தொற்று தங்கள் நாட்டிற்குள் பரவாமல் பார்த்துக் கொள்வதில் கவனமாக இருந்து வருகிறது. இந்நிலையில் யார் வடகொரிய எல்லைக்குள் ஊடுருவினாலும் அவர்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இரு நாடுகளுக்கும் இடையே எத்தனையோ பகை இருந்தாலும் இதுபோன்று கொலை செய்யும் சம்பவம் நடந்தது இல்லை என்றும். கடந்த 12 ஆண்டுகளில் இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது.