கடந்த  3  வாரங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் முதல் முறையாக நேற்று மே தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார் என வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன ,  இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள வடகொரிய மத்திய செய்தி நிறுவனம் கே சி என் ஏ தொழிலாளர் தினத்தை கொண்டாடும் வகையில் வட கொரிய தலைநகர் யாங்யாங்  அருகே உள்ள சன்சியான் நகரில் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள உரத் தொழிற்சாலையை கிம்  திறந்து வைத்தார் என  அந்த ஊடகம்  செய்தி வெளியிட்டுள்ளது , மேலும் அது வெளியிட்டுள்ள புகைப்படத்தில்  கிம் ஜாங் உன் தொழிற்சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.  இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு சிவப்புநிற பலூன்களை கையில் வைத்து கிம்முக்கு கைகளைத் தட்டி ஆரவாரம் செய்ததாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது .

 

அத்துடன் கிம்மின் சகோதரியான கிம் யோ ஜாங்  அவருடன் இருப்பது போன்ற புகைப்படத்தையும் அது  வெளியிட்டுள்ளது .புதிதாக திறக்கப்பட்டுள்ள  உரத் தொழிற்சாலை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்றும் இந்த ஆலையை உருவாக்கிய கிம்-சேக் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஊழியர்களை அவர் வாழ்த்தியதாகவும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த செய்தி கிம் குறித்து கடந்த 20 நாடுகளுக்கும் மேலாக நீடித்து வந்த ஊகங்களுக்கு முற்றி புள்ளி வைத்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன , அதாவது  கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி கிம்மின் தாத்தாவும் வடகொரியாவின் தந்தை என அழைக்கப்படும் கிம் இல் சாங் பிறந்ததின கொண்டாட்டத்தில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளவில்லை இது அந்நாட்டு மக்களை மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பல சந்தேகத்தை எழுப்பின .  இந்நிலையில் இது குறித்து செய்தி வெளியிட்ட அமெரிக்க ஊடகமான சிஎன்என், 

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதையடுத்து அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது, என்றும் பின்னர்  அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் என்றும் , அவர் கோமா நிலையில் உள்ளார் எனவும் அடுத்தடுத்து செய்தி வெளியிட்டு பரபரப்பை  ஏற்படுத்தியது. இது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இத்தகவலை உறுதிப்படுத்தும் வகையில் பேட்டி கொடுத்தார்,  தொடர்ந்து வட கொரியா குறித்து விசாரித்து வருவதாகவும் அவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த தகவலை முற்றிலுமாக மறுத்த தென்கொரிய ஊடகங்கள் அதிபர் கிம் ஜாங் உன் பற்றி வரும் தவறு தகவல்களில் உண்மை இல்லை ,  வடகொரியாவில் அதுபோன்ற எந்த அசாதாரண சூழ்நிலைகளும் நிலவவில்லை என  மறுப்பு தெரிவித்தது .

 

இதற்கிடையில் அதிபர் கிம் பற்றி பல்வேறு தகவல்கள் பரவின ,  கிம் இறந்துவிட்டார் எனவும் விரைவில் அவருக்கு இறுதிச்சடங்கு  செய்ய வடகொரியா கமுக்கமாக தயாராகி வருகிறது எனவும் செய்திகள் வெளியாகின. இது அனைத்தும் ஒரு ஊகத்தின் அடிப்படையிலேயே வெளிவந்த தகவல்கள் ஆகும், முன்னதாக இது குறித்து தெரிவித்த தென் கொரிய அதிபரின் ஆலோசகர் மூன் சுங்-இன் சி.என்.என் பத்திரிகையிடம், வட கொரிய தலைவரின் உடல்நிலை நல்ல நிலையில் உள்ளது அவர் "உயிருடன் இருக்கிறார்" என கூறினார் , கிம் ஏப்ரல் 13 ஆம் தேதி  முதல் நாட்டின் கிழக்கு கடற்கரையில் உள்ள வொன்சன் பகுதியில் தங்கியிருப்பதாகக் அவர் தெரிவித்தார்.  கடந்த 2014-ம் ஆண்டும்  கிம் குறித்த  இது போன்ற பல்வேறு வதந்திகள் வந்தன, ஆனால் 6 வாரங்களாக மக்கள் மத்தியில் வராத கிம் பின்னர் வந்தார். தற்போது கடந்த 20 நாட்களாக மறைவில் இருந்த கிம் மீண்டும் வந்திருக்கிறார் என வட கொரிய ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இது குறித்து தெரிவித்துள்ள சிஎன்என் இது வட கொரியா அதிகாரபூர்வ இணையதள செய்திதான என்பதை உறுதி செய்ய முடியவில்லை என தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.