இயற்பியல் நோபல் பரிசு 2023: எலெக்ட்ரான் ஆய்வுக் கருவிகளைக் கண்டுபிடித்த 3 பேருக்கு அறிவிப்பு
இயற்பியல் துறையில் 2023ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு எலெக்ட்ரான் ஆய்வுக் கருவிகளைக் கண்டுபிடித்த 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல் துறையில் 2023ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு எலெக்ட்ரான் ஆய்வுக் கருவிகளைக் கண்டுபிடித்த 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த பியர் அகோஸ்டினி (Pierre Agostini), ஜெர்மனியைச் சேர்ந்த பிரென்ஸ் கிரவுஸ் (Ferenc Krausz) மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த அன்னே எல் ஹூலியர் (Anne L'Huillier) ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. எலக்ட்ரான்களை ஆய்வு செய்யும் கருவியை கண்டுபிடித்ததில் இவர்கள் மூவரின் பங்களிப்பும் முக்கியமானது என்பதற்காக நோபல் பரிசு அளிக்கப்படுகிறது.
அனைத்து பொருட்களிலும் காணப்படும் எலக்ட்ரான் (electron) மூலக்கூறுகளின் இயக்கவியல் ஆய்வுக்காக ஒளியின் அட்டோசெகண்ட் துடிப்புகளை (attosecond pulses of light) உருவாக்கும் சோதனை முறையைக் இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மருத்துவ நோபல் பரிசு 2023: கொரோனா தடுப்பூசிக்கு வழிவகுத்த இரு விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு
முன்னதாக திங்கட்கிழமை மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு ஹங்கேரியைச் சேர்ந்த கட்டாலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரூ வெய்ஸ்மேன் ஆகிய இருவருக்கும் கூட்டாக அறிவிக்கப்பட்டது. கொரோனா தடுப்புக்கான எம்ஆர்என்ஏ (mRNA) தடுப்பூசியை உருவாக்கத்துக்காக இந்த விருது கொடுக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேதியியலுக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்படும். தொடர்ந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசு அக்டோபர் 5ஆம் தேதியும், அமைதிக்கான நோபல் பரிசு அக்டோபர் 6ஆம் தேதியும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அக்டோபர் 9ஆம் தேதியும் அறிவிக்கப்பட உள்ளன.
அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் இருந்து அறிவிக்கப்படும். மற்ற துறைகளுக்கான அறிவிப்புகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருந்து வெளியாகும்.
ஜிம்பாப்வேயில் வெடித்துச் சிதறிய விமானம்: இந்தியத் தொழிலதிபர் ஹர்பால் ரந்தாவா உள்பட 6 பேர் பலி