இந்தியர்களுக்கு சோறுபோட்டு 500 கோடி பணத்தை ஆட்டயபோடும் பாகிஸ்தான்...!! நாட்டுக்கு வாங்க... வாங்கான்னு அழைக்குது..!!
அனைத்து இந்தியர்களும் விசா இல்லாமல் வெறும் பாஸ்போர்ட்டுடன் பாகிஸ்தானுக்கு சென்று வரலாம் என தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக 11 ஆயிரம் ரூபாய் பணம், ஏழு கிலோ எடையுடைய உடைமைகளை கொண்டு செல்லலாம் என்றும், கர்தார்பூர் குருதுவாராவிற்கு வரும் இந்தியர்களுக்கு மதிய உணவு வழங்க பாகிஸ்தான் உறுதி அளித்துள்ளதாக அப்போது அவர் கூறினார்.
கர்தார்பூர் குருத்வாராவிற்கு வரும் இந்தியர்கள் விசா இல்லாமல் வந்து செல்லலாம் எனவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளதுடன், பாக்வரும் இந்தியர்களுக்கு மத்திய உணவு வழங்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அதற்கான முன்பதிவும் ஆன்லைனில் தொடங்கியுள்ளது. இது குறித்து செய்தியை இந்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் தாஸ் வெளியிட்டுள்ளார். அதில் அனைத்து இந்தியர்களும் விசா இல்லாமல் வெறும் பாஸ்போர்ட்டுடன் பாகிஸ்தானுக்கு சென்று வரலாம் என தெரிவித்துள்ளார்.
அதிகபட்சமாக 11 ஆயிரம் ரூபாய் பணம், ஏழு கிலோ எடையுடைய உடைமைகளை கொண்டு செல்லலாம் என்றும், கர்தார்பூர் குருதுவாராவிற்கு வரும் இந்தியர்களுக்கு மதிய உணவு வழங்க பாகிஸ்தான் உறுதி அளித்துள்ளதாக அப்போது அவர் கூறினார். ஆனாலும் புனிதப் பயணம் வரும் இந்தியர்களிடம் வசூலிக்க உள்ள 20 டாலர் அதாவது 1,500 ரூபாய் கட்டணத்தை தளர்த்திக் கொள்ள பாகிஸ்தான் சம்மதிக்கவில்லை என்றும் அப்போது அவர் கூறினார் இதனால் இந்தியர்களிடம் இருந்த வசூலிக்கும் கட்டணத்தால் பாகிஸ்தானுக்கு ஆண்டுக்கு 555 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என கணக்கிடப் பட்டுள்ளது.
சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் கடைசி காலத்தில் பாகிஸ்தானிலுள்ள கர்தார்பூர் வாழ்ந்து மறைந்தார். அவர் வாழ்ந்ததற்கு நினைவாக இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரவி நதிக்கரையில் தர்பார் சாஹிப் குருத்வாரா என்ற பெயரில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து அன்றாடம் குறைந்தது 5 ஆயிரம் சீக்கியர்கள்வரை பாகிஸ்தான் கர்தார்பூருக்குச் சென்று குருநானக் நினைவிடத்தை தரிசித்து வருகின்றனர். அத்துடன் ஆண்டுதோறும் அவரது நினைவுதினம் மற்றும் பிறந்த தினத்தில் அவரின் நினைவிடத்திற்கு இந்தியாவிலிருந்து லட்சக் கணக்கில் சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம்.
அந்த வகையில் வரும் நவம்பர் 9ஆம் தேதி இந்தியாவிலிருந்து, லட்சக்கணக்கான சீக்கியர்கள் அவரது நினைவிடத்திற்கு புனித பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே பாகிஸ்தானும் இந்தியாவும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் எளிதாக புனித பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தேரா பாபா நகரிலிருந்து, சர்வதேச எல்லை வரை செல்ல சிறப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் எல்லையில் இருந்து கர்தார்பூர் செல்லும் வரை சிறப்பு பாதையை ஏற்கனவே பாகிஸ்தான் அமைத்துள்ளது. அந்த பாதையை வரும் நவம்பர் 9 ஆம் தேதி குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினத்தன்று பாகிஸ்தான் திறக்க உள்ளது குறிப்பிடதக்கது.