இந்தியா எந்த படையையும் அனுப்ப வேணாம்... நாங்களே பாத்துக்குறோம்... ராஜபக்சே அதிரடி!
தேசிய பாதுகாப்பு படையை இந்தியா அனுப்ப வேண்டிய அவசியமே இல்லை. தீவிரவாதத்தை நாங்களே சமாளிப்போம் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு படையை இந்தியா அனுப்ப வேண்டிய அவசியமே இல்லை. தீவிரவாதத்தை நாங்களே சமாளிப்போம் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 21-ஆம் தேதி 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த அதிபயங்கர சம்பவத்தில் 350 பேர் கொல்லப்பட்டனர். இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் பயங்கர காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
தீவிரவாதத்தை ஒடுக்க இலங்கை முயற்சித்து வருகிறது. தீவிரவாதிகளை பிடிக்க இன்டர்போல் முந்துவந்தது. அதேபோல இலங்கைக்கு உதவ உலக நாடுகள் தயாராக உள்ளது. அந்த வகையில் இலங்கையில் தீவிரவாத தாக்குதலை சமாளிக்க இந்தியாவில் இருந்து தேசிய பாதுகாப்பு படை விரைகிறது. இந்த குழுவில் வெடிகுண்டு நிபுணர்கள், தீவிரவாத தடுப்பு பிரிவினர் இலங்கை செல்ல தயாராக உள்ளனர்.
இந்த நிலையில் இலங்கைக்கு இந்தியாவின் உதவி தேவையில்லை என முன்னாள் அதிபர் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்; அதில் அவர் கூறுகையில் உதவி செய்ய முன் வந்திருக்கும் இந்தியாவுக்கு நன்றி. ஆனால் எங்கள் மண்ணில் வெளிநாட்டு படைகளான தேசிய பாதுகாப்பு படையினர் தேவையில்லை. இதுவரை இலங்கைக்கு இந்தியா உதவியாக இருந்து வருகிறது.
ஆனால் தேசிய பாதுகாப்பு படையினரை அனுப்புவது தேவையில்லாத ஒன்று, எங்களுக்கு வெளிநாட்டு வீரர்கள் தேவையில்லை. எங்கள் ராணுவப் படைக்கு தீவிரவாதத்தை எதிர்க்கும் அளவுக்கு திறமை உள்ளது. அவர்களுக்கு அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் கொடுத்தால் போதுமானது என இவ்வாறு அதில் கூறியிருக்கிறார்.