ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸை அழிக்க நித்தியானந்தா கூறிய ஆலோசனை வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

சீனா நாட்டில் வுகானில் இருந்து டிசம்பர் மாதம் கிளம்பிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது.  இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நேற்று 81 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 803 ஆக உயர்வடைந்தது.  இதேபோன்று 2,147 பேர் கூடுதலாக வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். இதனால் சீனா முழுவதும் 36,690 பேருக்கும் கூடுதலாக நோய் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில்,  91 பேர் உயிரிழந்துள்ள நிலையில் வைரஸ் பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை 902 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று 39,800 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என சீன சுகாதார அதிகாரிகள் இன்று தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில்,  சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை அழிக்க நித்தியானந்தா ஆலோசனை வழங்கி இருக்கிறார். அந்த வீடியோவில் தொடர்ந்து இடைவிடாமல் 'ஓம் நித்தியானந்த பரமசிவோகம்' என, பிரார்த்தனை செய்தால் கொரோனாவை அழிக்க முடியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.