நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 2022 -2023 ஆண்டுக்கான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் மும்பையில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உள்ளது இந்தியா.

சுவிட்சர்லாந்தின் லாஸன்ஸில் நடைபெற்ற 134 ஆவது சர்வதேச ஒலிம்பிக் அகமிட்டி கூட்டத்தில் இந்தியாவில் இருந்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினரான பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவியும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனருமான நீதா அம்பானி யும், இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் நரேந்திரர் துருவ் பத்ராவும் கலந்துகொண்டனர்.

அப்போது, 2022 -2023 ஆண்டுக்கான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் மும்பையில் நடத்த வேண்டும் என்ற  கோரிக்கையை முன்வைத்து அதற்கான திட்ட முன்வடிவையும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பெக்கிடம் வழங்கினர். இந்தியாவில், விளையாட்டு துறையை மேம்படுத்தவும்,விளையாட்டு குறித்த விழிப்புணர்வு இளைஞர்கள் மத்தியில் ஊக்குவிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தை மும்பையில் நடத்த இப்போதே அஸ்திவாரம் போடப்பட்டு உள்ளது
  
இந்த கூட்டத்தில், பத்ராவை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் என்பது கூடுதல் தகவல்.