நைஜீரியாவில் கண்ணிமைக்கும் நேரத்தில் கொடூர தாக்குதல்... பொதுமக்கள் 65 பேர் உயிரிழப்பு..!
நைஜீரியாவில் போக்கோஹராம் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பொதுமக்கள் 65 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நைஜீரியாவில் போக்கோஹராம் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பொதுமக்கள் 65 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள போர்னோ எனுமிடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வின் போது போகோஹராம் எனும் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 65 பேர் உயிரிழந்தனர், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக தங்களின் கிராமத்தின் மீது நுழைந்த போகோஹராம் தீவிரவாதிகள் 11 பேர் அப்பகுதி மக்கள் கொலை செய்ததற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இச்சம்பவம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நைஜீரிய அதிபர் முஹம்மது புஹாரி, போகோஹராம் தீவிரவாத அமைப்பின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு போர்னோ மாகாணத்திலுள்ள பெண்கள் பள்ளியிலிருந்து 276 சிறுமிகளை போக்கோஹராம் தீவிரவாதிகள் கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.