Asianet News TamilAsianet News Tamil

நிறைவடைந்த ஜி-20 மாநாடு … டில்லி புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி…

next 20 g conference at argentina
next 20 g conference at argentina
Author
First Published Jul 8, 2017, 10:06 PM IST


ஜி 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நேற்றுதொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாட்டு தலைவர்களையும் சந்தித்து பேசினார். 

ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, கனடா பிரதமர் ஜஸ்டின் டிரிடியூ ஆகியோரை நேற்று சந்தித்தார்.முன்னதாக அவர் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா – சீனா இடையே போர் மூளும் சூழல் இருக்கும் நிலையில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசியது மிக முக்கியமாக கருதப்படுகிறது.

மாநாட்டின் நிறைவு நாளான இன்று மெக்சிகோ, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். இந்நிலையில் ஜி20 மாநாடு இன்றுடன் நிறைவடைந்ததையொட்டி பிரதமர் மோடி டில்லி புறப்பட்டார்.

இதனிடையே 2018-ம் ஆண்டு ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு அர்ஜென்டினாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு ஜி-20 மாநாடு ஜப்பானிலும், 2020-ம் ஆண்டு ஜி-20 மாநாடு சவுதி அரேபியாவிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios