கொரோனா வைரசை எங்கள் நாட்டில் நாங்கள் கட்டுபடுத்தி விட்டோம் எனவே நாங்கள் இன்று இரவு முதல் ஊரடங்கை தளர்த்த உள்ளோம் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார் . கொரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல் பட்ட பெண் ஆளுமை என பல உலக நாடுகள் ஜெசிந்தாவை  பாராட்டி வந்த நிலையில் அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார் . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது ,  சுமார் 150க்கும் அதிகமான நாடுகள் இதில் பாதிக்கப்பட்டுள்ளன .  இதுவரை  30 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலகம் முழுவதிலும் சுமார் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரசிலிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் . 

இந்நிலையில் அமெரிக்கா ஸ்பெயின் இத்தாலி பிரான்ஸ் ஜெர்மனி ரிட்டன் துருக்கி உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன ,  எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் நோய்த்தொற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்பும் அதிகமாகி உள்ளது .  சீனாவில் இந்த வைரஸ் தோன்றியபோதே சுதாரித்துக் கொண்ட சில நாடுகள் இந்த வைரசில் இருந்து மிக எளிதில் மீண்டு வந்துள்ளன .  அந்த வகையில் நியூசிலாந்து தற்போது கொரோனாவில் இருந்து  முழுவதுமாக  மீண்டுள்ளது இதுவரையில் நியூசிலாந்தில் வெறும் ஆயிரத்து 469 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் ,  அதில் மொத்தம் 19 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் மொத்தமாக இந்த வைரஸில் இருந்து 1,180 பேர் குணமாகி உள்ள நிலையில் சுமார் 270 பேர் லேசான வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் . 

ஒரே ஒரு நபர் மட்டும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் ,  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்,  நியூசிலாந்தில் இதுவரை 1,500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது அது சுமார் 90% பேர் குணமடைந்து விட்டனர் ,  இந்நிலையில்  நியூசிலாந்தில் கொரோனா  வைரஸ் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது .  நோய் உருவாவதற்கு காரணமாக இருந்த அனைத்தும் கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டுள்ளன.  வைரஸ் இல்லாத நிலைமையை நியூசிலாந்து அடைந்துள்ளது.  இதனால் ஒட்டுமொத்தமாக நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அர்த்தமல்ல தற்போது அது மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு விட்டது என்று அர்த்தம்.  அதனால் நியூசிலாந்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் சில நிபந்தனைகளுடன் தளவு செய்யப்படுகிறது.

சீனாவின் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியவுடன் நாங்கள் எங்கள் நாட்டின் எல்லைகளை மூடி அதோடு முழு ஊரடங்கையும் உடனடியாக அமல்படுத்தி எடுத்த நடவடிக்கைகளின் மூலமாக கொரோனாவை நியூசிலாந்தில் தடுத்து இருக்கிறோம் என அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் இந்நிலையில் அவருக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.