மறுபடியும் முதலில் இருந்து…? சீனாவில் மீண்டும் ஒரு புது கொரோனா…? கல்வி நிலையங்கள் மூடல்
சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
பெய்ஜிங்: சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
சீனாவில் மருத்துவ நகரமான உகானில் இருந்து உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது கொரோனா வைரஸ். தொடக்கத்தில் இதன் தன்மையை அறிய முடியாமல் அனைவரும் திணற… உலக நாடுகளை இந்த வைரஸ் பாடாய்படுத்தியது.
அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்தன. இந் நிலையில் சீனாவில் தற்போது மீண்டும் ஒரு புது வகையான கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அந்நாட்டின் வடக்கு மற்றும் வட மேற்கு மாகாணங்களில் இந்த வைரஸ் படு வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.
அதன் எதிரொலியாக லான்சோ நகரில் உள்ள 40 லட்சம் பேரும் வெளியேறக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஜியான், லான்சோ நகரங்கள் இடையே விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் சுற்றுலா தலங்களும் தற்காலிகமாக அடைக்கப்பட்டு உள்ளன. கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மங்கோலியாவில் இருந்து வந்த சிலரின் மூலமாக இந்த வைரஸ் பரவி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அனைத்து சரியாகிவிட்டது போன்று எண்ணியிருந்த தருணத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை அறிந்த நாடுகள் கலங்கி போயிருக்கின்றன.