அமெரிக்காவின் தல்லாஸ்  மிருககாட்சி சாலையில் புதிதாக பிறந்த கொரில்லா குட்டியை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு செல்கின்றன. ஜூன் 25-ம் தேதி ஹப் என்ற 22 வயதான கொரில்லா ஒரு அழகான குட்டியை ஈன்றது. இந்த குட்டி கொரில்லா ஆணா அல்லது பெண்ணா என்ற தகவலை கூட மிருககாட்சி நிர்வாகம் வெளியிடவில்லை.இன்னும் பெயரிடப்படாத இந்த குட்டி, தனது தாயின் கையில் தவழ்ந்து விளையாடி மகிழ்கிறது. தனது குழந்தையை கையில் எடுத்த தாய் கொரில்லா நெஞ்சோடு இறுக அணைத்துக்கொண்டது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குட்டி கொரில்லா ஆரோக்கியமாக உள்ளதால் அதனை காண பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.