Asianet News TamilAsianet News Tamil

Jacinda Resigns: நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் ராஜினமா செய்வதாக திடீர் அறிவிப்பு:பின்னணி என்ன?

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இருந்துவரும் ஜெசிந்தா அர்டெர்ன் தனது பதவியிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். இது அந்நாட்டு மக்களுக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

New Zealand Prime Minister Jacinda Ardern resigns and declares she will not run for re-election.
Author
First Published Jan 19, 2023, 9:18 AM IST

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இருந்துவரும் ஜெசிந்தா அர்டெர்ன் தனது பதவியிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். இது அந்நாட்டு மக்களுக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

நியூசிலாந்து நாட்டின் பொதுத்தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் அதற்கு முன்பாகவே ஜெசிந்தா ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். வரும் பிப்ரவரி மாதம் தனது பதவியிலிருந்து விலகுவதாக ஜெசிந்தா தெரிவித்துள்ளார். 

இந்தியாவுக்கு கிடைத்தது வெற்றி... லஷ்கர்-இ-தொய்பா தலைவனை பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா.!!

இதையடுத்து, இடைக்காலமாக ஆளும் தொழிலாளர் கட்சியிலிருந்து புதிதாக பிரதமர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

New Zealand Prime Minister Jacinda Ardern resigns and declares she will not run for re-election.

இதற்காக வரும் 22ம் தேதி தொழிலாளர் கட்சி புதிய பிரதமர் பதவிக்கான நபரைத் தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு நடத்துகிறது. அதில் கட்சிக்குள் மூன்றில் 2 பங்கு ஆதரவைப் பெறுபவர் அடுத்தப் பிரதமராக 10 மாதங்களுக்கு நீடிப்பார். அது மட்டுமல்லாமல் அடுத்துவரும் தேர்தலிலும் போட்டியிடப்போவதில்லை என ஜெசிந்தா அர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து நாட்டில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுத்தேர்தல் நடக்கும். அந்த வகையில்கடந்த 2017ம் ஆண்டு ஜெசிந்தா பிரதமர் பதவியைப் பெற்றார், 2020ம் ஆண்டுநடந்த தேர்தலிலும் தொழிலாளர் கட்சி வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. அப்போதும் பிரதமராக ஜெசிந்தா பதவி ஏற்றார்.

11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட் நிறுவனம்!

கொரோனா காலத்தில் உலக நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் நியூசிலாந்தை பெரிய  பாதிப்பின்றி கட்டுப்படுத்தியது ஜெசிந்தாவின் நிர்வாகம்தான். மேலும் பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்தும் நாட்டை பாதிக்காமல் ஜெசிந்தா சிறப்பாக நிர்வாகம் செய்தார்.

New Zealand Prime Minister Jacinda Ardern resigns and declares she will not run for re-election.

இந்நிலையில் தொழிலாளர் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்தபோது, பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதாக ஜெசிந்தா அர்டெர்ன் திடீரென அறிவித்தார். இது அந்தக் கட்சியைச் சேர்ந்த பலருக்கும் அதிர்ச்சியளிப்பதாக அமைந்தது. 

பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ இந்த ஆண்டு பிற்பகுதியில் நடக்கும் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு எனக்கு சக்திஇல்லை. நான் பிரதமராக இருந்த காலத்தில் நான் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி இருக்கிறேன். என்னிடம் இருந்து கட்சியும் அதிகமாக எடுத்துள்ளது.

தவிர்க்கமுடியாத, எதிர்பாராத சவால்கள் வரும்போது அதை சமாளிக்க, எதிர்கொண்டு போராட, முழுமையான தகுதியானவராக இல்லை என நினைக்கும்போது அதிலிருந்து விலகிவிட வேண்டும். அந்தவகையில் நான் இப்போது விலகும் நேரம் வந்துவிட்டது” எனத் தெரிவித்தார்

உலகின் மிக வயதானவராகத் திகழ்ந்த 118 வயது பாட்டி மரணம்

3வது முறையாக நியூசிலாந்து நாட்டின் பிரதமராக வருவார் ஜெசிந்தா அர்டெர்ன் வருவார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார். நியூசிலாந்து நாட்டில் இடைத் தேர்தல் வருவதைத் தவிர்க்கும் பொருட்டு, தொடர்ந்து ஜெசிந்தா எம்பி பதவியில் நீடிப்பார். வரும் அக்டோபர் 14ம் தேதி பொதுத்தேர்தல் நடக்க உள்ளது.

New Zealand Prime Minister Jacinda Ardern resigns and declares she will not run for re-election.

ஜெசிந்தா பதவிவிலகும் பின்னணி என்ன

நியூசிலாந்து நாட்டில் தொடர்ந்து 2 முறை ஆட்சியில் இருந்துவரும் தொழிலாளர் கட்சி மக்கள் மத்தியில் ஆதரவை இழந்துவருகிறது, பிரதமராக இருக்கும் ஜெசிந்தாவின் புகழும் மக்கள் மத்தியில் குறைந்துவருகிறது என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்தது. இதேநிலையில் தேர்தலில் போட்டியிட்டால் தொழிலாளர் கட்சி வரும் தேர்தலில் தோல்வி அடைய நேரிடும் என்று சர்வேயில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கட்சியை புதுப்பிக்கும் பொருட்டு ஜெசிந்தா தனது பிரதமர் பதவி ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios