Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவுக்கு கிடைத்தது வெற்றி... லஷ்கர்-இ-தொய்பா தலைவனை பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா.!!

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவன் அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்துள்ளது. 

UN declared Lashkar e Taiba leader abdul rehman makki as global terrorist
Author
First Published Jan 18, 2023, 12:24 AM IST

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவன் அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்துள்ளது. முன்னதாக பாகிஸ்தானில் அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவன் அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று இந்தியா ஐநாவில் வலியுறுத்தி வந்தது. ஆனால் இந்தியாவின் இந்த முயற்சியை சீனா தடுத்து வந்தது.

இதையும் படிங்க: டிகிரி படித்திருந்தால் போதும் இந்திய கடற்படையில் வேலை... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

இந்த நிலையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவன் அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்துள்ளது. இதுக்குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவன் அப்துல் ரஹ்மான் மக்கி (மும்பை, டெல்லி செங்கோட்டை மீதான தாக்குதலில் தொடர்புடையவன்), சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்படுகிறான்.

இதையும் படிங்க: 4 வயது சிறுவன் வயிற்றில் ப்ரேஸ்லெட்.. அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் !

அவன் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎல்-வின் தொடர்பில் உள்ளவன் என்பது உறுதியாகி உள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கொண்டு வந்த தீர்மானம், ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் - 7ம் அத்தியாயத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு கிடைத்த பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது. இதேபோல் அமெரிக்காவும் அப்துல் ரஹ்மான் மக்கியை பயங்கரவாதி பட்டியலில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios