இன்புளுயன்சா எனப்படும் குளிர் காய்ச்சலுடன் கொரோனா பாதிப்பும் சேர்ந்த ஃப்ளோரொனா என்னும் புதிய வைரஸ் இஸ்ரேலில் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
இன்புளுயன்சா எனப்படும் குளிர் காய்ச்சலுடன் கொரோனா பாதிப்பும் சேர்ந்த ஃப்ளோரொனா என்னும் புதிய வைரஸ் இஸ்ரேலில் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகையே புரட்டிப் போட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட இந்த கொரோனா வைரஸ், உலக நாடுகள் முழுவதும் படிப்படியாக பரவ தொடங்கியது. இதில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டு லட்சகணக்கான பேர் உயிரிழந்தனர். கடந்த ஓராண்டு காலமாக ஊரடங்கு, தடுப்பூசி என பல்வேறு கட்டுப்பாடுகளை மேற்கொண்ட பின்னரும் வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்தபாடில்லை. கொரோனா வைரஸ் தொற்று மரபணு மாறி புதிய புதிய தொற்றுகளாக உருவெடுக்கிறது. உலக சுகாதார அமைப்பு கிரேக்க எழுத்துகளின் அடிப்படையில் தான் தொற்றின் பெயர் சூட்டப்படுகிறது.

அதன் அடிப்படையில் கொரோனா என்ற பெயர் உருவானது. அந்த வகையில் கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் கொரோனா என்ற பெரும் தொற்று உருமாறி புதிய வகை தொற்றாக பரவத் தொடங்கியது. இதற்கு ஒமைக்ரான் என பெயரிடப்பட்டது. ஒமைக்ரான் தொற்று டெல்டா வைரஸை விட அதிகமாக பரவும் தன்மையுடையது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது வரை உலக நாடுகளில் ஒமைக்ரான் தொற்று தொடர்ந்து அதிவேகமாக பரவி வருகிறது. இது மட்டுமல்லாமல் டெல்டா மற்றும் ஒமைக்ரான் கலவையால் டெல்மைக்ரான் என்ற புதிய தொற்றும் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உருவாகியுள்ள வைரஸ்களின் தாக்கல் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று இஸ்ரேலில் முதன்முறையாக புதிய வகை வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை தொற்று மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலில் டெல் அவிவ் நகரில் உள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு இன்புளுயன்சா எனப்படும் குளிர் காய்ச்சலுடன் கொரோனா பாதிப்பும் இருந்துள்ளது. இது இரண்டும் சேர்ந்து இரட்டை பாதிப்பாக மாறி இருந்ததில் அவருக்கு கொரோனா தொற்று உரு மாறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தொற்றிற்கு ஃப்ளோரொனா என்ற புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் மக்கள் அச்சமடைய பெரும் காரணம், இஸ்ரேலில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் மூன்று டோஸ் பூஸ்டர் தடுப்பூசி மற்றும் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர்கள். இந்த நிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் உருமாறி ஒருவர் உடலில் பாதிப்பை ஏற்படுத்துவது மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
