பதவியை ராஜினாமா செய்கிறார் தெரசா மே... புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு..!

இங்கிலாந்தில் புதிய பிரதமராக, கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

New UK prime minister Johnson

இங்கிலாந்தில் புதிய பிரதமராக, கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து பிரிந்து செல்லும், பிரெக்சிட் ஒப்பந்தத்தை இங்கிலாந்து எம்.பி.க்கள் ஏற்க மறுத்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர் தெரசா மே, கடந்த ஜூன் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, அவர் தற்காலிக பிரதமராக பதவியில் தொடர்வார் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் நாட்டின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. கன்சர்வேட்டிவ் கட்சியை பொறுத்தவரை கட்சி தலைவராக இருப்பவரே நாட்டின் பிரதமராகவும் இருப்பார்.

 New UK prime minister Johnson

இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் லண்டன் மேயர் போரீஸ் ஜான்சன் மற்றும் வெளியுறவுத் துறை செயலாளர் ஜெராமி ஹன்ட் ஆகியோர் போட்டியிட்டனர். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. கட்சியின் இணையதளத்தில் கடந்த வெள்ளி மற்றும் சனியன்று ஆன்லைன் வாக்குப்பதிவு நடந்தது.  New UK prime minister Johnson

இதில் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாக, 92,153 ஓட்டுகளும், ஜெர்மி ஹன்ட்டிற்கு ஆதரவாக 46,656 ஓட்டுகளும் கிடைத்தன. இதனையடுத்து, புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போதைய பிரதமர் தெரசா மே தனது பதவியை நாளை ராஜினாமா செய்கிறார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios