new omicron xe varient: பிரிட்டனில் புதுவகையான 'XE' கொரோனா வைரஸ்: அதிகவேகமாகப் பரவும்: WHO எச்சரிக்கை

new omicron varient: பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸின் கலவை சேர்ந்த புதுவகையான வைரஸ் சார்ஸ்-கோவ்-2 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸுக்கு எஸ்இ(XE recombinant) உருமாறிய வைரஸ் கலவை என்று உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது. 

new omicron x varient:  As XE Variant Emerges, Experts Say Indians Shouldn't Ditch the Mask Just Yet

பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸின் கலவை சேர்ந்த புதுவகையான வைரஸ் சார்ஸ்-கோவ்-2 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸுக்கு எஸ்இ(XE recombinant) உருமாறிய வைரஸ் கலவை என்று உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் அதிவேகமாகப் பரவுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு, தொற்றுநோய் குறித்து வாராந்திர அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 

உருமாற்ற வைரஸ்

2022ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி பிரிட்டனில் உருமாறி கொரோனா வைரஸ்களின் கலவையான வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை 600 வகையான உருமாற்ற வைரஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த XE உருமாற்ற வைரஸ்என்பது ஒமைக்ரான் வைரஸின் பிஏ.1, பிஏ.2 ஆகியவற்றின் கலவையாக இருக்கிறது. 

new omicron x varient:  As XE Variant Emerges, Experts Say Indians Shouldn't Ditch the Mask Just Yet

பிரிட்டனில் கண்டறியப்பட்ட இந்த XE உருமாற்ற வைரஸ் என்பது முன்பு இருந்த பிஏ.2 வைரஸ் பரவும் வேகத்தைவிட 10 சதவீதம் அதிகமாக இருக்கும். மிகுந்த ஆபத்தையும் உருவாக்ககூடும்.

ஆய்வு தொடர்கிறது

உலகளவில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டபின் 88 சதவீதத்தினர் உடலில் இருந்தது, XE உருமாற்ற வைரஸ்தான் இருந்தது. இந்த வைரஸின் பரவும் வேகம், குணங்கள், தீவிரத்தன்மை ஆகியவற்றைக் கண்டறியும்வரை ஒமைக்ரான் வைரஸின் ஒருபகுதியாகவே வகைப்படுத்தப்படும்.

உருமாறிய வைரஸ் கலவை குறித்து உலக சுகாதார அமைப்பு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இந்த வைரஸால் மக்களுக்கு பெரிய ஆபத்து இருக்கிறதா என்பதை தொடர்ந்து ஆய்வுசெய்து, ஏதேனும் ஆதாரங்கள் கிடைத்தால் வெளியிடும்.

new omicron x varient:  As XE Variant Emerges, Experts Say Indians Shouldn't Ditch the Mask Just Yet

3 விதமான கலவை

பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு அமைப்பு கண்காணித்தவகையில் 3 விதமான உருமாறி கலவை வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை XD, XF, XE ஆகியவைரஸ்களாகும்.

இதில் எக்ஸ்டி, எக்ஸ்எப் வைரஸ்கள் டெல்டா, ஒமைக்ரான் பிஏ.1ஆகியவற்றின் குணங்களைக் கொண்டிருக்கும். எஸ்இ வைரஸ் ஒமைக்ரான் பிஏ.1 வைரஸ் மற்றும் பிஏ.2 வைரஸைக் கொண்டிருக்கும்.

மரபணு மாற்றம்

ஒரேநேரத்தில் மனிதர்களை உருமாறிய கலவை வைரஸ்கள் தாக்கும் போது, மனித உடலின் மரபணுவிலேயே மாற்றம் ஏற்படும் சாத்தியங்கள் இருக்கின்றன.கடந்த பெருந்தொற்று காலங்களில் இதுபோன்று உருமாறிய கலவை வைரஸ் ஒரே நேரத்தில் வந்துள்ளன.

new omicron x varient:  As XE Variant Emerges, Experts Say Indians Shouldn't Ditch the Mask Just Yet

பிரிட்டனில் இதுவரை எஸ்எப் வகை கலவைவைரஸால்38 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். ஆனால், எஸ்டி வைரஸ் பாதிப்புக்கானஅறிகுறிகள் பிரிட்டனில் இல்லை.ஆனால் உலகளவில் 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பிரி்ட்டனில் எஸ்இ வகை கலவை வைரஸால் 637 பேர்இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

new omicron x varient:  As XE Variant Emerges, Experts Say Indians Shouldn't Ditch the Mask Just Yet

முகக்கவசம் முக்கியம்

டெல்லி மருத்துவ கவுன்சில் தலைவர் மருத்துவர் அருண் குப்தா கூறுகையில் “ பெருந்தொற்று முடியவில்லை இன்னும் இருக்கிறது. பல்வேறு நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் குறிப்பிடத்தகுந்த அளவில் பாதிப்பு இருக்கிறது. ஆதலால், இந்தியாவுக்கும் அதுபோன்ற சூழல்வராது என்பதற்கு உத்தரவாதம் ஏதும் இல்லை. ஆதலால், கொரோனா தடுப்பு வழிகளான முகக்கவசம், சமூக விலகல், கைகளைச் சுத்தப்படுத்துதலை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்” எனத்தெரிவித்தார்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios