அதிர்ச்சி தகவல்... உருமாறிய கொரோனா வைரஸ்... மீண்டும் ஊரடங்கு அமல்... உஷாராகும் இந்தியா..!
இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் தொற்றுகள் வேகமாக பரவி வரும் நிலையில் இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறது.
இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் தொற்றுகள் வேகமாக பரவி வரும் நிலையில் இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறது.
கொரோனாவின் தாக்கம் உலகளவில் பரவி, கோடிக்கணக்கானோர்களை பாதித்து வருகிறது. பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தடுப்பு மருந்து கண்டறியும் சோதனையில் தீவிரம் காட்டி வருகின்றன. இதில் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், உருமாற்றத்துடன் கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. ஆனாலும் நிலைமை தற்போது கைமீறி போய் விட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் நேற்று தெரிவித்தார்.
இதற்கிடையே, லண்டன், தென்கிழக்கு, கிழக்கு இங்கிலாந்து பகுதிகளில் மீண்டும் பொது ஊடரங்கு அமலுக்கு வருவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று அறிவித்தார். அத்தியாவசியப் பணிகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும் என்றும், அத்தியாவசியமற்ற கடைகள், உள் அரங்க உடற்பயிற்சி கூடங்கள், பொழுதுபோக்கு கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என்றார். இந்த தடை வரும் டிசம்பர் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றார். கூடுமானவரை பொதுமக்கள் பயணங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். திட்டமிட்டபடி கிறிஸ்துமஸை கொண்டாட முடியாது என்பதை கனத்த இதயத்துடன் சொல்லிக் கொள்வதாகவும் ஜான்சன் கூறி உள்ளார்.