ஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் போதும் ...! ரூ. 72 லட்சம் உங்களுக்கு தான் ..!
அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்துள்ளது.
அமெரிக்காவில் இயங்கிவரும் விட்டமின்வாட்டர் என்ற நிறுவனம் சமூக வலைத்தளத்தில் ஒரு சவாலை பகிர்ந்துள்ளது அதன்படி ஒரு வருடகாலம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவர்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் 72 லட்சம் பரிசு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிப்பவர்கள் அந்த நிறுவனம் வழங்கும் மொபைல் போன் தவிர லேப்டாப் டெக்ஸ்டாப் அமேசான் கூகுள் போன்றவற்றை பயன்படுத்தலாம் என்றும் ஆனால் லேப்டாப்,ஸ்மார்ட்போன் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என்றும் கண்டிஷன் போட்டு உள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் விட்டமின் வாட்டர் நிறுவனத்திடம், " ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருக்க என்ன காரணம் என்றும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத நேரத்தில் வேறு என்ன செய்யப்போகிறோம் என்ற ஒரு திட்டமிடுதலை கொண்ட விளக்கத்தை அந்த நிறுவனத்திடம் நாம் அளிக்க வேண்டும்.
இந்த போட்டியில் கலந்து கொள்ள ஜனவரி 8, 2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் தேர்வான போட்டியாளர்களுக்கு அந்த நிறுவனம் ஒரு மொபைல் போனை வழங்கும் கடைசியாக போட்டியாளர்களின் விண்ணப்பத்தை சோதனை செய்து வரும் ஜனவரி 22ஆம் தேதிக்குள் இந்த சவாலில் பங்கு பெரும் இறுதிகட்ட போட்டியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மொபைல் மொபைல் போன் வழங்கப்படும்.
இந்த ஜனவரி முதல் அடுத்த ஜனவரி வரும்வரை இந்த ஓராண்டு காலமாக ஸ்மார்ட்போனை பயன்படுத்தாமல் இருக்கின்றார்களா என்பதை கண்டறியவும் சோதனை செய்ய உள்ளனர். இவை அனைத்தையும் மீறி கண்டிப்பாக இந்த ஓராண்டு காலம் ஸ்மார்ட்போனை பயன்படுத்தாத போட்டியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு அதிகபட்ச தொகையாக ரூபாய் 72 லட்சம் பரிசு வழங்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த சவாலை யாரெல்லாம் ஏற்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.