உக்ரைன் டூ இந்தியா வந்த மாணவர்.. வரவே இல்லை என்று வீடியோ வெளியிட்ட காங்கிரஸ்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள் !!
உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷிய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கீவ் நகரில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷிய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், முக்கிய நகரங்களில் ரஷிய வீரர்கள் வான்வெளி மூலம் தரையிறங்கி வருவதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்து வருகிறது.
தற்போது நிலையை விட மோசமான வகையில் சண்டை நடைபெற வாய்ப்புள்ளதால், கீவ் நகரில் இருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மத்திய அரசு ஆபரேசன் கங்கா திட்டம் மூலம் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அண்டை நாடு வரவழைத்து அங்கிருந்து விமானங்கள் மூலம் இந்திய அழைத்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 1377 பேரை ஏற்றிக்கொண்டு 6 விமானங்கள் இந்தியா புறப்பட்டுள்ளது என இந்தியா வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், கீவ் நகரில் இந்தியர்கள் ஒருவர் கூட இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்தியா அடுத்த 3 நாட்களில் 26 விமானங்கள் இயக்கப்பட இருக்கிறது.
உக்ரைன் வான்வெளி மூடப்பட்டுள்ளதால் ருமேனியா, ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கிய போன்ற நாடுகளில் வான்வெளியை இந்திய பயன்படுத்தி வருகிறது. போலந்தில் இருந்து நேற்று முதல் விமானம் புற்பட்டது. இந்திய ராணுவத்தின் சி-17 விமானம் இந்தியர்களை அழைத்து வர ருமேனியா சென்றுள்ளது.
இந்நிலையில் உக்ரைனில் சிக்கித்தவித்த இந்திய மாணவர் ஒருவர் மத்திய அரசின் முயற்சியினால் ஏற்கனவே இந்தியா வந்துவிட்டார். இந்நிலையில், அந்த மாணவர் உக்ரைனில் சிக்கித்தவிப்பதாகவும், அவரை மோடி அரசு கண்டுகொள்ளவில்லை என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டி இருக்கிறது. தற்போது அந்த காணொளியை வைத்து, நெட்டிசன்கள் காங்கிரஸ் கட்சியை கலாய்த்து வருகின்றனர். இதில் எல்லாமா பொய் அரசியல் செய்வது என்று காங்கிரசை டாராக கிழித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.