கொட்டிய காப்பியை தானே துடைத்த நெதர்லாந்து பிரதமர்...! வைரலாகும் வீடியோ
நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே தான் கொட்டிய காபியை தானே சுத்தம் செய்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மார்க் ரூடே, மிகவும் எளிமையான பிரதமர் என்று சமூக ஊடகங்களில் பாராட்டை பெற்று வருகிறார். சென்ற வருடம் நெதர்லாந்து மன்னரை சந்திக்க ரூடே சைக்கிளில் சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
மார்க் ரூடே, பாராளுமன்ற வளாகத்தில் நுழையும்போது, பாதுகாப்பு கதவை தாண்டி வந்தபோது, கையில் வைத்திருந்த காபி கோப்பை எதிர்பாராத விதமாக தவறி
விழுந்தது.
அதனை சுத்தம் செய்ய வந்த ஊழியர்களிடம் இருந்து, மாப்-ஐ வாங்கி ரூடே சுத்தம் செய்கிறார். மாப்-ன் உயரத்தை அதிகரிப்பது, குறைப்பது குறித்து ஊழியர்களிடம் கேட்டார். அதற்கு ஊழியர்களும் சந்தோஷத்துடன் அது குறித்து பதிலளித்தனர். அவரது இந்த செயலை ஊழியர்கள் பாராட்டினர்.