நேபாளத்தில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்.. அலறியடித்துக் கொண்டு வெளியேறி பொதுமக்கள்.. சாலையில் தஞ்சம்.!

நேபாளத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் உணரப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில்  4.7, 5.3 பதிவாகியுள்ளது. 

Nepal Three time  earthquakes

நேபாளத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் உணரப்பட்ட சம்பவத்தை அடுத்து பொதுமக்கள் சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். 

நேபாளம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு தனி நாடாகும். தெற்காசியாவில் உள்ள இந்நாட்டின் வடக்கில்  சீன அரசும், மேற்கு மற்றும் கிழக்குத் திசைகளில் இந்தியாவும் அமைந்துள்ளன. இங்கு அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும்.  

இதையும் படிங்க;- Brain Eating Amoeba:மனித மூளையை தாக்கும் அமீபாவால் தென் கொரியாவில் ஒருவர் உயிரிழப்பு: பிரைன் ஈட்டிங் அமீபா?

இந்நிலையில், நேபாளம் பாக்லுங் மாவட்டத்தில் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. முதல் நிலநடுக்கம் 4.7 அளவில் பாக்லுங் மாவட்டத்தின் அதிகாரிசௌர் பகுதியிலும், 2.07 மணியளவில்குங்காவைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5.3 ரிகடர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  3.28 மணிக்கு அதிகாரிசௌர் பகுதியில் 4.0 என்றரிக்டர் அளவுகோலில் 3வது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டது.

அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கத்தால் பொதுமக்கள் சாலையிலேயே தஞ்சம் அடைந்தனர். மூன்று முறை பதிவான நிலநடுக்கங்களால் உயிர் சேதமோ, வீடுகள், கட்டிடங்கள் குறித்த சேதமோ குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. 

இதையும் படிங்க;- China Covid Cases: கையைப் பிசையும் சீனா! இந்த ஒரு நகரில் மட்டும் தினசரி 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios