#UnmaskingChina:சீனாவை நம்பி தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட நேபாளம்..!!

அரசியல் ரீதியாக சரியானவை அல்ல, ராஜதந்திர ரீதியிலும் பொருத்தமானவை அல்ல என விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஜூன் 30 அன்று உயர் என்சிபி தலைவர்கள் ஷர்மா ஓலி பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

Nepal prime minister sharma oli going to resign prime minister posting

நேபாள பிரதமர் ஷர்மா ஓலி, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் அவருக்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா-சீனா இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது, ஜூன் 15ஆம் தேதி இந்திய ராணுவத்தினர் மீது சீன படையினர் அத்துமீறி நடத்திய காட்டுமிராண்டி தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இது இரண்டு நாடுகளுக்கும் இடையேயான போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில் சீனாவுக்கு ஆதரவாக நேபாளமும் களமிறங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் எல்லைப் பகுதிகளான லிபுலேக், லிம்பியதூரா, கலபானி உள்ளிட்ட பகுதிகள் தனக்கு சொந்தமானது என நேபாளம் உரிமை கொண்டாடி வருவதுடன், அந்த மூன்று பகுதிகளையும் தனது எல்லைக்குள் சேர்த்து புதிய எல்லை வரை படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Nepal prime minister sharma oli going to resign prime minister posting 

அதற்கு தனது நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று அதை நேபாளம்  சட்டமாக்கியுள்ளது. அதாவது இந்தியாவின் சிக்கிம், மேற்கு வங்கம், பீகார், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களையொட்டி சுமார் 1850 கிலோமீட்டர் நீளத்திற்கு  நேபாளம் இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. அதே நேரத்தில் இருநாடுகளும் பாரம்பரியமாக உறவு பாராட்டி வருகின்றன, நேபாளம் இந்தியாவின் வர்த்தகக் கூட்டாளியாகவும் இருந்துவருகிறது. கிட்டத்தட்ட நேபாளத்தைச் சேர்ந்த  32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூர்கா வீரர்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.  இரு நாட்டுக்கும் இடையே பாரம்பரிய உறவு நீடித்தாலும் பல பத்தாண்டுகளாக எல்லையில் பிரச்சனை நீடிக்கிறது. இந்நிலையில்  இந்தியா தங்களது பகுதிகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என நேபாள பிதமர் ஷர்மா ஓலி வலியுறுத்தி வருவதுடன், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் தீவிரம் காட்டி வருகிறார். அவரின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்துள்ள ஆளும் கட்சியினர் ஷர்மா ஓலிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Nepal prime minister sharma oli going to resign prime minister posting

மேலும் சொந்தக் கட்சியினரே கே.பி ஷர்மா ஓலிக்கு எதிராக குரல் எழுப்பி வருவதுடன் இந்தியாவுக்கு எதிரான அவரின் நடவடிக்கைகள் அரசியல் ரீதியாக சரியானவை அல்ல, ராஜதந்திர ரீதியிலும் பொருத்தமானவை அல்ல என விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஜூன் 30 அன்று உயர் என்சிபி தலைவர்கள் ஷர்மா ஓலி பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிலைக்குழு கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது, அதில் பிரதமர் ஷர்மா ஒளியின் எதிர்காலம் முடிவு செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தனது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் ஷர்மா ஓலி இந்தியாவை கடுமையாக விமர்சித்துள்ளார், அதாவது,  இந்தியாவுக்கு எதிராக தான் பேசி வந்த காரணத்தினால் இந்தியா தனது ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்கிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளார். தனக்கு எதிராகவும், தனது ஆட்சியை கவிழ்ப்பதற்காகவும் காட்மாண்டுவில்  ஹோட்டல்கள் மற்றும் பல்வேறு இடங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது எனவும் ஷர்மா ஓலி குற்றஞ்சாட்டினார். ஆளுங் கட்சி உறுப்பினர்களே தனக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் அவர் நாட்டு மக்களுக்கு இறுதியாக இன்று மாலை உரை நிகழ்த்த வாய்ப்புள்ளது எனவும், அதே நேரத்தில் தனது பதவியை அவர் ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios