தனது பிறந்தநாளில் தனது நாட்டின் வரைபட வடிவிலான கேக்கை கத்தியால் வெட்டி நேபாள பிரதமர் பிறந்தநாள்  கொண்டாடியது  அந்நாட்டு மக்களை மிகுந்த அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  சொந்த நாட்டு மக்களே நேபாள பிரதமருக்கு எதிராக கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.  இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது , நேபாளம் இந்தியா சீனா ஆகிய இரு நாடுகளும் நேபாளத்திற்கு  உரிமை கொண்டாடி வருகின்றன . இந்நிலையில் நேபாள பிரதமர்  ஒலி தனது 60வது பிறந்த நாள் விழாவை நேற்று கொண்டாடினர்

அவரது சொந்த ஊரான கிழக்கு நேபாளத்தில்  ஜகாத்தும் பகுதியில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒலி மற்றும் அவரது மனைவி ராதிகா சாக்கியா மற்றும் பள்ளி மாணவர்கள் நெருங்கிய நண்பர்கள் என பலர் பங்கேற்றனர் .  ஏற்கனவே  அங்க தயாரித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 15 கிலோ எடையுள்ள கேக் காத்மாண்டுவில் இருந்து நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு கொண்டு வரப்பட்டது.   நேபாள வரைபடம் வரையப்பட்டிருந்த அந்த கேக்கை பிரதமர் ஒலி  தான் வைத்திருந்த கத்தியால்  வெட்டிக்கூறு போட்டார் . பின்னர்  அங்கிருந்தவர்களுக்கு கேக் தரப்பட்டது, இதற்கான வீடியோ  சமூக வலைதளங்களில் பரவியது இது நேபாள மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தியது.   நாட்டின் பிரதமர் தனது நாட்டின் வரைபட  வடிவிலான கேக்கை வெட்டியது நாட்டு மக்களின் கண்டனத்தை பெற்றுள்ளது.    

 இதுதொடர்பாக நெட்டீசன்கள் இணையத்தில் வெளியிட்டுள்ள கண்டன  பதிவில் " நேபாள குற்றவியல் சட்டம் 151 வது  பிரிவின் கீழ் நேசியக் கீதம் தேசியக் கொடி,   உள்ளிட்டவற்றை அவமதிப்பு செய்வோர்  மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது அதாவது நேபாள தேசம் வரைபடத்தை அவமதிப்பு செய்யத பிரதமர் பிரதமர்  மன்னிப்புக் கேட்க வேண்டும் என குரல் எழுந்துள்ளது.