Asianet News TamilAsianet News Tamil

கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து... 23 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

நேபாளத்தில் கல்வி சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் பேருந்து, மலையில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 23 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Nepal bus accident...23 killed
Author
Nepal, First Published Dec 23, 2018, 11:03 AM IST

நேபாளத்தில் கல்வி சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் பேருந்து, மலையில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 23 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நேபாளத்தின் கோரஹி நகரில் உள்ளது கிருஷ்ணா சென் இச்சுக் பாலிக்டெக்னிக். இங்கு பயலும் மாணவர்கள் தாவரவியல் தொடர்பான கல்விச் சுற்றுலாவுக்காக கபூர்கோட் சென்றனர். இந்த பேருந்தில் 34 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் மற்றும் டிரைவர் இருந்துள்ளனர். Nepal bus accident...23 killed

ராம்ரி கிராமத்துக்கு அருகே மலைப்பாதையில் பேருந்து வந்துக்கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனையடுத்து 1,640 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 23 மாணவர்கள் உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Nepal bus accident...23 killed

இந்த விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் பேருந்தை வேகமாக இயக்கியதால் விபத்து நடைபெற்றுள்ளது என்பது தெரிவந்துள்ளது. நேபாளத்தில் இத்தகைய விபத்துகள் அடிக்கடி நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. இதேபோல் கடந்த வாரம் மலைப் பாதையில் பேருந்து உருண்டதில் 16 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios