பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து... உடல்சிதறி 14 பேர் உயிரிழப்பு..!
பேருந்து பள்ளத்தாக்கில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து பள்ளத்தாக்கில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தின் காலின்சவுக் பகுதியில் பிரபலமான புனிதத்தலம் அமைந்துள்ளது. இங்கே இருந்து பக்தாபூர் நகருக்கு 40 பேரை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்றுள்ளது. நேற்று காலை 8.30 மணியளவில் சிந்துபால்சவுக் மாவட்டத்தில் உள்ள சுன்கோஷி பகுதியில் சென்றிக்கொண்டிருந்தது. அப்போது, ஆபத்தான வளைவு ஒன்றில் பேருந்து திரும்பிய போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர், பள்ளத்தாக்கில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக உடனே மீட்புக்குழுவினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்டு குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.