Asianet News TamilAsianet News Tamil

Nepal Bus Accident: நேபாளத்தில் இந்திய பயணிகள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து! 14 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் 40 இந்தியர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


 

Nepal Bus Accident...14 dead as bus carrying 40 Indian passengers plunges into a river tvk
Author
First Published Aug 23, 2024, 1:16 PM IST | Last Updated Aug 23, 2024, 1:46 PM IST

உத்தர பிரதேசம் பதிவெண் கொண்ட பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் நேபாளம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. பேருந்து தனஹுன் மாவட்டத்தில் மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டு இருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  

இந்த விபத்து தொடர்பாக மீட்டு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை பேருந்தில் பயணம் செய்த 14 பேர் உயிரிழந்தனர். 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: வரலாற்று சிறப்பு பயணம்.. உக்ரைன் சென்றடைந்தார் பிரதமர் மோடி.. ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு..

முன்னதாக, கடந்த ஜூலை மாதம் நேபாளத்தின் திரிசூலி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 2 பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டதில் பலர் 
இந்தியர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios