Ukraine-Russia War: மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டும்... செஞ்சிலுவை சங்கத்தினர் கோரிக்கை!!

உக்ரைனின் வோல்னோவாக்காவில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ செஞ்சிலுவை சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Need help with rescue operations asks Red Cross

உக்ரைனின் வோல்னோவாக்காவில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ செஞ்சிலுவை சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை காலை உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதாக அறிவித்தது. உக்ரைன் அரசு ஐரோப்பாவிற்கு நெருக்கமாகவும், நேட்டோ படைகளுக்கு நெருக்கமாகவும் இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனை ரஷ்யா அனைத்து பக்கங்களில் இருந்தும் தாக்கி வருகிறது. முக்கியமாக மேற்கு உக்ரைன் பரப்பை குறி வைத்து ரஷ்யா தாக்கி வருகிறது. உக்ரைனின் கார்கிவ் பகுதியில்தான் ரஷ்யா இதுவரை கொடூர தாக்குதலை நடத்தி உள்ளது.

Need help with rescue operations asks Red Cross

அங்கு கடந்த 6 நாட்களாக கடுமையான ஏவுகணை தாக்குதல்கள், பீரங்கி தாக்குதல்களை நடத்தி உள்ளது. உக்ரைனுக்கு மேற்கு உலக நாடுகள் உதவி வருகின்றன. உக்ரைன் மீது ரஷ்யா 7ஆவது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. தலைநகர் கிவ் நகரை நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே, அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைக்குமாறு ரஷ்ய படைகளுக்கு அதிபர் விளாடிமர் புடின் உத்தரவிட்டுள்ளதால், அசாதாரமாண சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிட வேண்டும் என ஐ.நா. சபை, உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. உக்ரைன் - ரஷ்யா இடையேயான பேசுவார்த்தை பெலாரஸ் நாட்டில் நடைபெற்று முடிந்துள்ளது.

Need help with rescue operations asks Red Cross

இதில், பேசப்பட்ட சாராம்சங்கள் தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம், ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 21 நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன. அதேபோல், தங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்த நாடுகள் மீது பதிலுக்கு ரஷ்யாவும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் ரஷ்யா மீது மிகப்பெரிய பொருளாதாரப் போரை நிகழ்த்தவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உக்ரைனின் வோல்னோவாக்காவில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ செஞ்சிலுவை சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் டொனஸ்க் அருகே வோல்னோவாக்காவில் உள்ள ரயில்வே நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios