பாகிஸ்தானுக்கு தண்ணி காட்ட வருகிறது ஐஎன்எஸ் கண்டேரி போர் கப்பல்...!! கடல் பரப்பில் பிரம்மோஸ் ஏவுகணைகளை தாங்கி நிற்கப்போகிறது...!!

நீருக்கடியில் பயன்படுத்தக்கூடிய எஸ்யூடி ரக  குண்டுகள்,  மற்றும்  எதிரிநாட்டு கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடிய ரேடார் மற்றும் அகச்சிவப்பு கதிர்களால் கண்டுபிடிக்கப்பட முடியாத வல்லமை கொண்ட ஏவுகணைகள் இக் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன

navy second scorpene class submarine will be commissioned

இந்திய கப்பற்படையை வலிமை படுத்தும் நோக்கில் எதிரிநாட்டு ரேடார் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு ஊடுருவும் ஆற்றல் கொண்ட ஐஎன்எஸ் கண்டேரி என்ற போர்கப்பல் வரும் 28 ஆம் தேதி கப்பற் படையில் இணைக்கப்பட உள்ளது.navy second scorpene class submarine will be commissioned

ஸ்கார்ப்பின் ரக நீர் மூழ்கி கப்பல்கள் பிரான்ஸ் நாட்டின் வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டவையாகும், இந்த ரகத்தில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் கல்வாரி என்ற கப்பல் ஏற்கனவே  இந்திய கப்பல் படையில் இடம்பெற்றுள்ளது. இந்த கப்பல் சுமார் 1565 டன் எடை கொண்டவையாகும் , மேலும் ஏழு கார்ப்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் கட்டுமான பணியில் இருந்து வருகிறது. நீரின் பரப்பில் 20 கிலோ மீட்டர் வேகம் முதல்  37 கிலோ மீட்டர் வேகத்திலும்  நீருக்கடியில் சுமார் 55 கிலோமீட்டர் வேகத்திலும் சீறிப்பாயும் ஆற்றல் கொண்டவையாகும். தொடர்ந்து 5 நாட்களுக்கு சுமார் 350 மீட்டர் ஆழத்தில் கிட்டதட்ட 12 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பயணித்து ரோந்துப் பணியை மேற்கொள்ளும் அற்றல் கொண்டவை இந்த கார்ப்பீன். 

navy second scorpene class submarine will be commissioned

8 ஆதிகாரிகளும் 37 மாலுமிகளும் இந்த கப்பலில் இடம் பெற்றிருப்பர். நீருக்கடியில் பயன்படுத்தக்கூடிய எஸ்யூடி ரக  குண்டுகள்,  மற்றும் எதிரிநாட்டு கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடிய ரேடார் மற்றும் அகச்சிவப்பு கதிர்களால் கண்டுபிடிக்கப்பட முடியாத வல்லமை கொண்ட ஏவுகணைகள் இக் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன. இதே போன்று நவீன  ரேடார் உள்ளிட்ட தொழில்நுட்பங்களின்  கண்ணில் மண்ணைத் தூவும் வகையில், இப்போர் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

navy second scorpene class submarine will be commissioned

ஒலியின் வேகத்தை விஞ்சும் பிரம்மோஸ் ஏவுகணைகளும், பராக் ரக ஏவுகணைகளும் இந்த கப்பல்களில் பிரதானமாக இடம்பெற்றுள்ளன.  2 ஹெலிகாப்டர்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்டதாகவும்  இக்கப்பல் உள்ளன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios