இந்திய எதிர்ப்பு பிரச்சாரம் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாதத்தின் முக்கிய முகமாக பார்க்கப்படுபவன் ‘நசீர் அகமது’  ஆவான். இரண்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்காக ஏற்கனவே சிறை தண்டனை அனுபவித்துள்ளான்.

மைனர் பையன் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் மைனர் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற குற்றத்திற்காக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். வரும் பிப்ரவரி 4ம் தேதி தண்டனை வழங்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்து பின்னர், ஐக்கிய நாடுகளுக்கு குடிபெயர்ந்த 64 வயதான நசீர் அகமது, முதலில் குற்றச்சாட்டுகளை மறுத்தார். பின்னர் அவருக்கும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் இடையேயான ஆடியோ உரையாடல் வெளிவந்த பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்கு 1970 களில் நசீர் 17 வயதாக இருந்தபோது தொடங்குகிறது. ஆனால், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் இளையவர்கள் ஆவார்கள். நசீரின் மூத்த சகோதரர்கள் முகமது ஃபாரூக் (71) மற்றும் முகமது தாரிக் (65), மைனர் சிறுவனை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் இணை குற்றம் சாட்டப்பட்டவர்கள். ஆனால் விசாரணைக்கு நிற்க தகுதியற்றவர்கள் எனக் கருதப்பட்டனர்.

நசீர் தனது பதவியைப் பயன்படுத்தி பாலியல் சலுகைகளைப் பெற முயன்றதாக ஒரு பெண்ணால் குற்றம் சாட்டப்பட்டதால், கடந்த ஆண்டு ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நசீர் காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கு எதிராக அடிக்கடி கொச்சையான பேச்சுகளை பேசுவதை வழக்கமாக கொண்டவர். 

பிரிவினைவாத காலிஸ்தானி குழுக்களையும் அவர் தீவிரமாக ஆதரித்துள்ளார். உண்மையில், 2018 இல் லண்டனின் டிராஃபல்கர் சதுக்கத்தில் சர்ச்சைக்குரிய வாக்கெடுப்பு 2020 கைஸ்தானி நிகழ்வில் அவர் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.விசாரணை நடந்துகொண்டிருந்தபோதும், நாஜி தொழிலாளர் கட்சியின் நிர்வாகக் குழுவின் முன் ஆஜராகத் திட்டமிடப்பட்டார், 

அங்கு அவர் பாக்கிஸ்தானில் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த யூத - விரோத நேர்காணலுக்காக அவர் அதிகாரப்பூர்வமாக நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நசீர் இரண்டு நாட்களுக்கு முன்பு கட்சியில் இருந்து விலகினார். நசீர் போன்றவர்கள் மூலம் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்த பாகிஸ்தானுக்கு இந்த தண்டனை பெரும் பின்னடைவாக அமையும் என்று கருதப்படுகிறது.