NASA Hubble: சூப்பர் நோவா! நாசா ஹபிள் தொலைநோக்கி பதிவு செய்த நட்சத்திர வெடிப்பு காட்சிகள்!
சூப்பர் நோவா எனப்படும் நட்சத்திர வெடிப்பு காட்சியின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மிகவுர் அரிதான நட்சத்திர வெடிப்பு காட்சியின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
விண்வெளியில் நிகழ்வுகளை அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு நாசா தொடர்ந்து பல செய்திகளை அளித்து வருகிறது. சமீபத்தில், நாசாவால் இயக்கப்படும் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கண்களுக்கு விருந்தாக அமையும் இந்த வண்ணமயமான புகைப்படங்கள் அனைவரையும் கவர்கின்றன.
விண்வெளியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெடித்துச் சிதறிய நட்சத்திரத்தின் புகைப்படங்கள் நாசாவின் தொலைநோக்கி மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளன. இந்தப் படங்களை நாசா தனது நாசா ஹபிள் என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Road trips from India: சாலைகள் வழி பயணம்! அற்புத அனுபவத்தைக் கொடுக்கும் சுற்றுலாத் தலங்கள்!
இந்தப் படங்களைப் பற்றி விளக்கியுள்ள நாசா, "சூப்பர்நோவா எனப்படும் பிரகாசமான, சக்திவாய்ந்த நட்சத்திரங்கள் வெடிப்புக்குப் பிந்தயை காட்சிகளை இவை காட்டுகின்றன. சூப்பர் நோவா நிகழ்வில் வெடித்துச் சிதறிய நட்சத்திரத்தின் பகுதிகள் விநாடிக்கு 25,000 மைல் (15,000 கி.மீ. முதல் 40,000 கி.மீ. வரை) வேகத்தில் நாலாபுறமும் சீறிப்பாய்கின்றன. இந்த சூப்பர்நோவா எச்சங்கள் வெடித்த நட்சத்திரத்தின் பகுதிகளுடன் அவை பயணிக்கும் பாதையில் உள்ள விண்கற்கள் போன்ற வான் பொருட்களையும் துடைத்துச் சென்றுவிடுகின்றன." என்று சொல்கிறது.
கடந்த ஆண்டு வெடித்துச் சிதறிய நட்சத்திரத்தின் ஒரு பகுதி மீது நாசா தனது விண்கலம் ஒன்றை வேண்டுமென்றே மோதவிட்டுப் அது பயணிக்கும் திசையை மாற்ற முடிகிறதா என்று சோதித்துப் பார்த்தது.
Supreme Court: தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்க புதிய குழு: உச்ச நீதிமன்றம் உத்தரவு