2 முறை தோல்வி.. விடாமுயற்சியால் ஆர்டெமிஸ் 1ஐ நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்த நாசா !!
நாசாவின் ஆர்டெமிஸ் 1 1 ஏவுதல் திட்டம் 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இன்று இந்திய நேரப்படி மதியம் 12.17 மணிக்கு புளோரிடாவின் கேப் கேனவெரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) ராக்கெட் மற்றும் ஆளில்லா ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு செலுத்தியது.
ஆகஸ்ட் மாதம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏவுகணையைப் பாய்ச்ச முடியவில்லை. செப்டம்பரில் இரண்டாவது முயற்சி, எண்ணெய் கசிவு காரணமாக நிறுத்தப்பட்டது. பிறகு அதே மாதம் ஈயன் புயல் வீசியதால் மூன்றாவது முயற்சியும் கைகூடவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போலோ ஏவுகணையை நிலவுக்கு அனுப்பிய பின்னர், நாசா பல பில்லியன் டாலர் செலவு செய்து மீண்டும் அத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதையும் படிங்க..கல்லூரிகளில் ராகிங் கொடுமையா.? கடும் நடவடிக்கை பாயும் - டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு !
இந்த முறையும் சிறிய தவறு ஏற்பட்டுள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. ரேடார் தளத்தில் இருந்து சிக்னல் இழப்பு ஏற்பட்டது. ஈத்தர்நெட் சுவிட்ச் செயலிழந்ததால் சிக்னல் இழப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் அது சரி செய்யப்பட்டது. இதனால் இந்திய நேரப்படி காலை 11.34-க்கும் தொடங்க இருந்த ஏவுதல் தாமதமானது என்று கூறியுள்ளார்கள். நாசாவின் இந்த ஓரியன் விண்கலத்தில் அதிர்வுகளை உணரும் சென்சார் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
நிலாவுக்கு மனிதர்கள் செல்வதற்கான சூழல் இருப்பதை அறிய சோதனைக்காக மனித திசுக்களை பரதிபலிக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மனித உடல்களை போன்ற 3 டம்மிகள் ராக்கெட் மூலம் நிலாவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. விண்வெளியில் உள்ள கதிர்வீச்சுகள் மனித உடல்களை எந்த அளவுக்கு தாக்குகின்றன என்பது இந்த மாதிரி பொம்மைகள் மூலம் அறியப்படும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க..டெக்ஸ்டர் சீரிஸ்.! புது பிரிட்ஜ்.! வேறொரு பெண்ணுடன் அவுட்டிங்.! கொடூரமாக கொல்லப்பட்ட காதலி
இதையும் படிங்க..உங்களுக்கு ரத்தம் கொதிக்கவில்லையா முதல்வரே.? திமுகவை அட்டாக் செய்த பாஜக !