நிர்வாண போஸ்... 3வது திருமணம்... ட்ரம்ப் மனைவி மெலானியாவின் மறுபக்கம்..!
ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், செர்பியன், சில்வேனியா போன்ற பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார். 2000 இல் அமெரிக்காவின் பிரபல மாடலாக இருந்த இவர் சில பத்திரிகைகளுக்கு நிர்வாணமாகவும் போஸ் கொடுத்திருகிறார்.
அமெரிக்க அதிபரின் மனைவி மெலானியா 1996 இல் சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தனது ஆர்கிடெக் படிப்பை தொடங்கினார். இவரைப் பற்றி புகைப்படக் கலைஞர்கள் சிரிக்கவே மாட்டார் என்று அப்போதே குறிப்பிட்டு இருந்தனர். பாரிஸில் நடைபெற்ற மாடலிங்கில் போட்டியில் 1992 இல் 2 வது இடத்தை பிடித்தார். பின்பு 1996 இல் அமெரிக்க மார்டலின் உலகில் காலடி எடுத்து வைத்தார். போட்டி நிறைந்த உலகில் தனது பயணத்தை மிகவும் வெற்றிகரமாகவே பயணித்து வருகிறார். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னை அழகுப் படுத்திக் கொணடார் என்ற விமர்சனத்தை எல்லாம் தாண்டி உலகின் மிகப் பெரிய மாடலாக வளர்ந்து நின்றார்.
பாரிஸ், கிட்கேட் கிளப்பில் ட்ரம்ப் உடன் நடந்த சந்திப்பு அவரது வாழ்க்கையை மிகவும் சுவாரசியம் உடையதாக மாற்றியிருந்தது. ட்ரம்ப் உடன் 2005 இல் திருமணம் நடக்கிறது. 2006 இல் மகன் பெயர்ன் பிறக்கிறார். தன்னை விட 24 வயது மூத்தவரை திருமணம் செய்து கொண்ட மெலானியாவை பார்த்து குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
அதிபர் ட்ரம்ப்புக்கு மெலானியா மூன்றாவது மனைவி. முதல் மனைவி இவானா, தற்போது இவருக்கு 63 வயது ஆகிறது. செக்கோஸ் லாவியா நாட்டைச் சேர்ந்தவர் இவர் ஒரு மாடல் அழகி மற்றும் வர்த்தகத்திலும் கொடி கட்டிப் பறந்தார். 1979 ட்ரம்ப் மணந்து கொண்ட இவர் 1992 பிரிந்தார். பின்னர், ட்ரம்ப், மரியா மாப்பில்ஸ் என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருடன் ட்ரம்ப் 6 ஆண்டுகள் வாழ்ந்தார். பின்பு மாடல் அழகியான மெலானியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ட்ரம்பின் மனைவியாகவும் அமெரிக்காவின் முதல் பெண்மணியாகவும் இருந்து வருகிறார்.
ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், செர்பியன், சில்வேனியா போன்ற பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார். 2000 இல் அமெரிக்காவின் பிரபல மாடலாக இருந்த இவர் சில பத்திரிகைகளுக்கு நிர்வாணமாகவும் போஸ் கொடுத்திருகிறார். தனது இளமையான தோற்றத்திற்கு தினமும் 7 பழங்களை சாப்பிடுவதாகவும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார் மெலானியா.
அமெரிக்காவின் குடிமக்கள் ட்ரம்ப்பை விட மெலானியா குறித்து அதிக மதிப்பு கொண்டிருப்பதாக ஒரு கருத்துக் கணிப்பில் தெரிய வந்தது. சிறந்த உடை நேர்த்திக்காகவும் மெலானியா உலக மக்களிடம் மதிப்பு பெற்றவராக இருக்கிறார்.