lithopedion |தாயின் வயிற்றில் கல்லாக மாறிய குழந்தை... 35 ஆண்டுகளுக்கு பின் அறுவைசிகிச்சை மூலம் அகற்றம்..!
73 வயதான மூதாட்டியின் வயிற்றில் கடந்த 35 ஆண்டுகளாக இருந்த கல் குழந்தையைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
73 வயதான மூதாட்டியின் வயிற்றில் கடந்த 35 ஆண்டுகளாக இருந்த கல் குழந்தையைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர் கடந்த 35 ஆண்டுகளாக வயிற்றில் குழந்தையை சுமந்து வந்த செய்தி உலகம் முழுவதும் பலரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது. அல்ஜீரியாவில் உள்ள ஸ்கிக்டாவை சேர்ந்த 73 வயதாகும் மூதாட்டிக்கு சமீபத்தில் வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற மூதாட்டிக்கு மருதுவர்கள் எக்ஸ் ரே எடுத்துள்ளனர். அப்போது ஒளிப்படத்தில் கண்ட காட்சியைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சர்யத்தில் உறைந்தனர். மூதாட்டிக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரேவில் அவரது வயிற்றில் குழந்தை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
73 வயதாகும் மூதாட்டி எப்படி கருவுற்றிருக்க முடியும் என்று சோதனை செய்தபோது அதைவிட பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மூதாட்டியின் கருவறையில் இந்த குழந்தை சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியுள்ளது. சுமார் ஏழு மாதங்களுக்கு பின்னர் வளர்ச்சிதையடைந்த குழந்தை கல்லாக மாறியுள்ளது. சுமார் 2 கிலோ எடைகொண்ட இந்த கல் குழந்தையை மூதாட்டி சுமார் 35 ஆண்டுகளாக சுமந்து வந்துள்ளார். கருவுற்றிருந்த போதும் மாதவிடாய் சரியாக வந்தது எப்படி என்றும் மருத்துவர்களிடம் மூதாட்டியின் உறவினர்கள் விளக்கம் கேட்டுள்ளனர்.
மருத்துவ உலகின் இதுபோன்ற கருவை லித்தோபிடியன் (Lithopedion) என்று கூறுகின்றனர். கருமுட்டையில் கரு உருவாகாமல் அடி வயிற்றில் கரு உருவானால் அதை லித்தோபிடியன் lithopedion என் அழைக்கிறார்கள். இவ்வாறாக சாதாரணமாக எல்லோருக்கும் கரு உருவாக வாய்ப்புள்ளது. ஆனால் அப்படி உருவாகும் கரு ஒரிரு நாளில் தானாக வெளியேறிவிடும். ஒருவேளை பெண்ணின் அடி வயற்றில் ஏதாவது பாதிப்பு இருந்தால் அது உடனடியாக சிக்கலை ஏற்படுத்தும். அந்த பாதிப்பு உயிரிழப்பிலும் முடியும் என்றும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட அல்ஜீரியா மூதாட்டிக்கு சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கரு உருவாகியுள்ளது. அப்போது கருவானது அவரது அடி வயிற்றிற்குள் சென்று அங்கிருந்து வெளியேர முடியாமல் அங்கேயே வளர்ச்சி அடைந்துள்ளது. ஏழு மாதங்களுக்கு பின்னர் கரு வளர்ச்சி அடையாமல் இருந்துள்ளது. வளர்ச்சிதை அடைந்த அந்த கரு கல் குழந்தையாக மாறியுள்ளது. கரு முட்டைக்குள் குழந்தை தங்காமல் அடி வயிற்றிற்கு சென்றுவிட்டால் அவருக்கு மாதவிடாய் சரியாக இருந்துள்ளது. இந்த காலக் கட்டத்தில் அவரது உடல் எடை மட்டும் கூடியுள்ளது. ஆனால் அது வயது முதிர்வால் ஏற்படும் மாற்றம் என நினைத்து அப்பெண் கல் குழந்தையை சுமந்து வந்துள்ளார். ஏழு மாதத்திற்கு பின்னர் குழந்தை வளர்ச்சிதை அடைந்ததால் அதனை உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி வெளியே தள்ள முயற்சி செய்திருக்கும் அது கைகூடாமல் போனதால் குழந்தை கல்லாக மாறியுள்ளது. 2 கிலோ கல் குழந்தையை 35 வருடங்களாக சுமந்து வந்த மூதாட்டி வயிற்றில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் கல் குழந்தையை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இடைப்பட்ட காலங்களில் மூதாட்டிக்கு அதிர்ஷ்டவசமாக எந்த வித உடல் பாதிப்பும் ஏற்படவில்லை.
உலகில் இதுவரை அதிகாரப்பூர்வமாக 290 பேருக்கு தான் இப்படியாக லித்தோபிடியன் lithopedion முறையில் கரு அவர்கள் வயிற்றில் வளர்ந்துள்ளது. முதன் முதலாக 1,582 ஆம் ஆண்டில் இதுபோல ஒரு பெண்ணின் வயிற்றில் கல் குழந்தை வளர்ந்துள்ளது. அந்த பெண் 82 வயதில் உயிரிழந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.