உத்திர பிரதேசத்தில் இருந்து வந்த தனி விமானம் மும்பையில் தரையிறங்கும் போது விபத்திற்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில், உத்திர பிரதேசத்தில் இருந்து தனி விமானம் ஒன்று தரையிறங்கும் போது எதிர்ப்பாராத விதமாக கட்டோபர் பகுதியில் கட்டுமான கட்டிடத்தில் மோதி, கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்து குறித்த முதல் கட்ட விசாரணையில் இந்த விமானத்தில் பயணித்த 2 விமானிகள் உட்பட, 5 பேர் பலியாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இருவர் படுகாயம் அடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விமானம் விபத்துக்குள்ளாகி தீ பிடித்தது எரிய தொடங்கியதை அடுத்து, தீயை அணைக்கு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


மேலும் இந்த சம்பவத்தில், தொழிலாளர் ஒருவர் உடலில் தீ பிடித்து எறிந்த காட்சியும் வெளியாகியுள்ளது. இந்த காட்சி பார்ப்பவர்கள் நெஞ்சை உலுக்கும் விதத்தில் உள்ளது.