இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 310ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிகிச்சைபெற்றுவருபர்களில் 100 க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையில் நேற்று முன்தினம் ஈஸ்டர் தினத்தன்று, தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டது. இதற்கு யார் காரணம் என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது. இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில் 40 பேர் வரை கைது செய்யப்பட்டிருப்பதாக இலங்கை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இவர்கள் அனைவரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. உலக நாடுகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலை அடுத்து இன்று இலங்கையில் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்பட்டது.

இலங்கையை உலுக்கிய இந்த தாக்குதலில் நேற்று வரை 295 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது. 500க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் சுமார் 100 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுவதாகக் கூறப்படுகிறது. மேலும் சிகிச்சைபெற்றுவருபவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.