பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்.. பொது நிகழ்ச்சிகளுக்கு ஜூலை 1 வரை தடை.. ரஷ்யாவில் என்ன நடக்கிறது?

வாக்னர் குழு, ரஷ்யாவை எச்சரித்துள்ள நிலையில், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என மாஸ்கோ மேயர் அறிவுறுத்தி உள்ளார்.

Moscow governor Public should not come out.. Ban on public events till July 1.. What is happening in Russia?

வாக்னர் குழுவின் எச்சரிக்கையில் ரஷ்யாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாக்னர் குழு என்பது, பல்லாயிரக்கணக்கான போராளிகளைக் கொண்ட ஒரு தனியார் இராணுவ அமைப்பாகும். உக்ரைனில் மட்டும் 50,000 க்கும் அதிகமானோர் வாக்னர் குழுவை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. வாக்னர் படைகள் உக்ரைன் போரில் முக்கிய பங்கு வகித்து. ரஷ்யா - உக்ரைன் போர் உச்சத்தில் இருந்த போது, பக்முத் நகரை கைப்பற்றுவதில் வாக்னர் குழுவினர் வெற்றி பெற்றனர். இருப்பினும், வாக்னர் குழு தலைவர் எவ்கெனி பிரிகோஜின் அதிகளவில் ரஷ்ய இராணுவத் தலைவர்களால் விமர்சிக்கப்பட்டார்.

இந்த சூழலில் எவ்கெனி பிரிகோஜின் தலைமையிலான வாக்னர் கூலிப்படையினர், ரஷ்யாவின் இராணுவத் தலைமையை அகற்றும் முயற்சியில் இரண்டு ரஷ்ய நகரங்களின் கட்டுப்பாட்டைக் கோரியுள்ளனர். மேலும் மூன்று இராணுவ ஹெலிகாப்டர்களையும் வீழ்த்தியதாகக் தெரிவித்துள்ளனர். புடினை பதவி நீக்கம் செய்ய மாஸ்கோவிற்கு ஆயுதமேந்திய படைகளை அனுப்பியதாகவும் கூறினார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு வில்லனாக மாறி இருக்கும் எவ்கெனி பிரிகாசின்; யார் இவர்?

இதை தொடர்ந்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய அதிபர் விளாடிமிர் புடின் "வாக்னர் கூலிப்படையினரின் ஆயுதமேந்திய கிளர்ச்சி 'முதுகில் குத்திய செயல்' என்றும், குழுவின் தலைவர்  பிரிகோஜின், ரஷ்யாவைக் காட்டிக் கொடுத்தார் என்றும் கடுமையாக சாடினார். மேலும் "நாம் எதிர்கொண்டது துரோகம். ஆடம்பரமான லட்சியங்கள் மற்றும் தனிப்பட்ட நலன்கள் தேசத்துரோகத்திற்கு இட்டுச் சென்றது. துரோகத்தின் பாதையில் உணர்வுபூர்வமாக நின்றவர்கள், ஆயுதமேந்திய கிளர்ச்சியைத் தயாரித்தவர்கள், அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாத முறைகளின் பாதையில் நின்றவர்கள், சட்டத்தின் முன்பு, நம் மக்களின் முன்பும் தவிர்க்க முடியாத தண்டனையை அனுபவிப்பார்கள்" என்று தெரிவித்தார்.

இதை தொடர்ந்து மாஸ்கோவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அரசாங்கம் மாஸ்கோவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை ஆட்சியையும் அறிவித்துள்ளது. வெடிகுண்டு ஏவுகணையுடன் கூடிய சோதனைச் சாவடி பாதுகாப்பு பணியாளர்கள் முகாம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் மாஸ்கோ மேயர் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார். மேலும் நகரத்தை தாண்டிய பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மாஸ்கோவில் நிலைமை கடினமாக உள்ளதாக எச்சரித்துள்ளார். மேலும் மாஸ்கோவில் திங்கள்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெகுஜன வெளிப்புற மற்றும் கல்வி நிறுவன நிகழ்ச்சுகளுக்கு ஜூலை 1 வரை தடை விதிக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இதனிடையே துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது புடினை பொது அறிவுடன் செயல்படுமாறு வலியுறுத்தினார். 

“ தப்பான முடிவு எடுத்துட்டீங்க புடின்.. ரஷ்யாவுக்கு விரைவில் புதிய அதிபர்..” வாக்னர் குழு எச்சரிக்கை..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios