பிரான்சில் நடந்து வரும் ஜி7 நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி முதல்முறையாக பங்கேற்று உரை நிகழ்த்தினார். மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர், ஜப்பான் பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளார்.

அப்போது காஸ்மீர் பிரச்சனை குறித்து ட்ரம்ப்பிடம் பேசினார் மோடி.   

அப்போது, "காஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் உள்ளது... இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தகம் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் . காஸ்மீர்  விவகாரம் பொறுத்தவரையில் அது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்  இடையேயானது. அந்த பிரச்சனையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்த்துக்கொள்ளும் என ட்ரம்ப்பிடம் தெரிவித்து இருந்தார். 

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என கூறி வந்த ட்ரம்ப், மோடி உடனான பேச்சுக்கு பின், காஸ்மீர் பிரச்சனை குறித்து இருநாடுகளும் பேசி தீர்த்துக் கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்ரம்ப் தெரிவிக்கும் போது , "காஸ்மீர் பிரச்சனை குறித்து மோடி என்னிடம் பேசினார்.. காஸ்மீர் பிரச்சனை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயானது. அந்த பிரச்சனையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்த்துக்கொள்ளும்" என தெரிவித்து இருந்தார். இதன் மூலம் உலகத்தில் மிக பெரிய தலைவர் மோடி என்பதை ஜி 7 மாநாட்டிலும் நிரூபணம் செய்து உள்ளார்.