நானும் டிரம்பும் காதலித்தோம்.. மலரும் நினைவுகளை பகிர்ந்த மாடல் அழகி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தானும் காதலித்ததாக பிரபல "பிளேபாய்" பத்திரிகையின் மாடல் அழகி ஒருவர் தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்பான சர்ச்சைகள் எழுவது புதிதல்ல. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டது முதல் அவர் அதிபரான பிறகும், அவரை பற்றி பல சர்ச்சைகள் எழுந்துகொண்டு தான் இருக்கின்றன.
அந்த வகையில் தற்போது, டிரம்ப் தன்னை காதலித்ததாக மாடல் அழகி ஒருவர் கூறியுள்ளார். மாடல் அழகியான கரேன் மெக்டொகல் தொலைபேசி நேர்காணல் ஒன்றில் பேசும்போது, கடந்த 2006ம் ஆண்டு டிரம்பும் தானும் சுமார் 10 மாதங்கள் காதலித்ததாக கூறியுள்ளார். அந்த 10 மாதத்தில் பலமுறை, தன்னை காதலிப்பதாக டிரம்ப் கூறியதாக கரேன் தெரிவித்துள்ளார். மாடல் அழகியின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை, கடந்த பிப்ரவரி மாதம், அதிபர் டிரம்பிற்கு கரேன் மெக்டொகல் உடன் காதல் இருந்ததாகவும், மற்றொரு பெண்ணுடனும் டிரம்ப் தொடர்பில் இருந்ததாகவும் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், கரேன் மெக்டெகால் தற்போது அதனை நேர்காணலில் உறுதி செய்துள்ளார். கடந்த 2006ம் ஆண்டு தொடர்பு ஏற்பட்டதில் இருந்து டிரம்ப் தன்னுடன் பலமுறை உடலுறவு வைத்துக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் கரேன் மெக்டொகலின் கருத்துக்கு அமெரிக்க வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.