அமெரிக்காவில் பேஷன் ஷோ ஒன்றில் ஒய்யார நடை நடைந்த கர்ப்பிணிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

அமெரிக்காவின், நியூயார்க் நகரில் பேஷன் வீக்கில் ரிஹான்னா சாவேஜ் எக்ஸ் பெண்டி உள்ளாடை ஷோ ஒன்று நடைபெற்றது.  நியூயார்க் பேஷன் வீக்கின் நிறைவு நிகழ்ச்சியாக புரோக்கிலினில் நடைபெற்றது.

இந்த பேஷன் ஷோவில் கர்ப்பிணியான ஸ்லிக் வுட்ஸ் (22) மாடல் கலந்து கொண்டார். இதற்காக கருப்பு நிற உள்ளாடையை அணிந்து கொண்டு, பேஷன் ஷோவில் ஒய்யாரமாக நடந்து சென்றார். 

பேஷன் ஷோவில், ஒய்யார நடை நடந்து கொண்டிருந்த மாடல் ஸ்லிக் வுட்ஸ்-க்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள், ஸ்லிக் வுட்ஸ்-ஐ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு சபீர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்லிக் வுட்ஸ்-ன் கணவரும் மாடலாக இருந்து வருகிறார்.