soviet union:mikhail gorbachev death: ‘சிதறிய சோவியத் யூனியனின்’ கடைசி அதிபர் மிக்கைல் கோர்பசேவ் காலமானார்
ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை உள்ளடக்கிய சோவியத் யூனியனின் கடைசி அதிபராக மிக்கைல் கோர்பசேவ் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 91.
ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை உள்ளடக்கிய சோவியத் யூனியனின் கடைசி அதிபராக மிக்கைல் கோர்பசேவ் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 91.
ஒருங்கிணைந்த சோவியத் யூனியன் நாட்டின் கடைசி அதிபராக கடந்த 1985ம் ஆண்டு பொறுப்பேற்றவர் மிக்கைல் கோர்பசேவ். மேற்கத்திய நாடுகளுக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையே நிலவி வந்த பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை மிக்கைல் கோர்பசேவுக்கே சேரும்.
அதுமட்டுமல்லாமல் சோவியத் யூனியன் அமைப்பில் ஒருங்கிணைந்திருந்த 15க்கும் நாடுகளுக்கும் சுதந்திரம் அளித்து தனித்து செயல்பட அனுமதித்தவர் மிக்கைல் கோர்பசேவ். சோவியத் யூனியன் நாடு கோர்பசேவ் ஆட்சியில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் கடந்த 1990ம் ஆண்டு கோர்ப்பசேவுக்கு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.
கணவரை கொலை செய்த பெண்ணுக்கு தூக்கு… நாற்காலியை எட்டி உதைத்து தண்டனையை நிறைவேற்றிய மகள்!!
சோவியத் பொருளாதாரத்தில் கோர்பசேவ் ஏராளமான பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். தடையில்லாத பொருளாதாரத்தை கொண்டு வந்து ஐரோப்பிய நாடுகளுடன் நட்புறவு கொண்டார், 1989ம் ஆண்டு பெர்லின் சுவரை தகர்த்தார், அதன்பின் இரு ஆண்டுகளில் இரும்புதிரை ஆட்சியான சோவியத் ஆட்சி முடிவுக்கு வந்தது. 1991ம் ஆண்டு டிசம்பர் மாதம் சோவியத் யூனியன் ஆட்சி முடிந்தது.
சோவியத் யூனியன் கடைசி அதிபர் கோர்பசேவ் மறைவுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் “ கோர்பசேவ் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என புதின் தெரிவித்துள்ளார்.
கோர்பசேவ் மறைவு செய்தி அறிந்ததும் ஐரோப்பிய தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயான் கூறுகையில் “ 1990ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற கோர்பசேவ், ஐரோப்பாவுக்கான பாதைக்கு வழிகாட்டினார்” எனத் தெரிவித்தார்.
Amazon's Man of the Hole: பிரேசில் அமேசான் காட்டின் கடைசி மனிதரும் காலமானார்! பூர்வகுடிகள் இனி யாருமில்லை
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறுகையில் “ கோர்பசேவ் பேச்சு வெறும் முழக்கங்களாக இல்லாமல் சீர்திருத்தங்களாக, மறுகட்டமைப்பாக இருந்தது. பல ஆண்டுகளாக தனிமைப்பட்டு, இழப்பில் இருந்த சோவியத் மக்களை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சென்றவர் கோர்பசேவ்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் கூறுகையில் “ கோர்பசேவ் சோவியத் யூனியனுக்கு அளித்த பங்களிப்பு, சோவியத் மக்களை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு சென்றது நமக்கு மிகப்பெரிய உதாரணம்” எனத் தெரிவித்துள்ளார்.
சோவியத் யூனியனுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே 2ம் உலகப் போருக்குப்பின் பனிப்போர் நீடித்தது. இதை முடிவுக்கு கொண்டு வந்து சோவியத் யூனியனை, ஐரோப்பாவுக்கு நெருக்கமாகக் கொண்டு வந்தவர் கோர்பசேவ். அதனால்தான் தீவிரமான கம்யூனிஸ்ட்களுக்கு கோர்பசேவ் ஆட்சியும், செயல்பாடும் பிடிக்கவில்லை. கோர்பசேவ் ஆட்சியில் அரசியல் கைதிகளாக இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் விடுவிக்கப்பட்டனர்.
உலகின் 3வது பெரிய பணக்காரர் ஆனார் கவுதம் அதானி!
கோர்பசேவ் உடல் மாஸ்கோ நகரில் உள்ள நோவோடெவ்சி கல்லறையில் அவரின் மனைவி ரெய்ஸாவின் கல்லறைக்கு அருகேஅடக்கம் செய்யப்பட உள்ளது. ரெய்ஸா 1999ம் ஆண்டு மறைந்தார்.
சோவியத் யூனியனின் கடைசி அதிபரா கோர்பசேவ் இருந்தாலும் ஜனநாயகத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் 2011ம் ஆண்டு 3வது முறையாக பொறுப்பேற்கக் கூடாது என்று கோர்பசேவ் வெளிப்டையாக விமர்சித்தார். ஆனால் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்ய அதிபராக 6 ஆண்டுகளுக்கு விளாதிமிர் புதின் கடந்த 2018ம் ஆண்டு 3வது முறையாக பொறுப்பேற்றார்.
அப்போது ப்ளூம்பெர்க் நியூஸுக்கு கோர்பசேவ் அளித்த பேட்டியில், “ மக்களின் கருத்துக்களை அறியாமல், மனதை அறியாமல் நாட்டுக்காக அனைத்தும் செய்ய முயன்றால், அது ஜனநாயகத்தை கிண்டல் செய்வதாகும். ஆப்ரிக்காவில் இருப்பது போன்ற சூழலை உருவாக்கும். அங்குதான் ஒரு அதிபர் 20 முதல் 30 ஆண்டுகள்வரை இருப்பார்” என விமர்சித்தார்.