Asianet News TamilAsianet News Tamil

Amazon's Man of the Hole: பிரேசில் அமேசான் காட்டின் கடைசி மனிதரும் காலமானார்! பூர்வகுடிகள் இனி யாருமில்லை

பிரேசிலில் அமேசான் காட்டில் வாழ்ந்த பூர்வ பழங்குடியினத்தில் இருந்த கடைசி மனிதரும் உயிரிழந்தார் என்று தெரியவந்துள்ளது.

An Amazon tribesman dubbed the "World's Loneliest Man" was discovered dead in Brazil.
Author
First Published Aug 30, 2022, 11:43 AM IST

பிரேசிலில் அமேசான் காட்டில் வாழ்ந்த பூர்வ பழங்குடியினத்தில் இருந்த கடைசி மனிதரும் உயிரிழந்தார் என்று தெரியவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக உறவுகள் அனைத்தையும் இழந்து, அந்த அடர்ந்த காட்டில் தனிமையில் வாழ்ந்த அந்த பழங்குடி மனிதர் சமீபத்தில் காலமாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

உலகத் தனிமை மனிதர் என்று பெயரெடுத்த அந்த மனிதர் இறந்துவிட்டதால், இனிமேல் அமேசான் காட்டில் பூர்வ பழங்குடியினர் யாரும் இல்லை.

உலகின் 3வது பெரிய பணக்காரர் ஆனார் கவுதம் அதானி!

மேன் ஆஃப்தி ஹோல் என்று கடைசி மனிதர் அழைக்கப்பட்டார். அதாவது நிலத்தின் அடியில் குழிதோண்டி அதில் அந்த கடைசி மனிதர் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசில் உள்ள பழங்குடியினருக்கான அமைப்பான புனாய் கூறுகையில் “நாங்கள் தொடர்ந்து அமேசான் காட்டில் பழங்குடியியினரின் கடைசி மனிதரை கண்காணித்து வந்தோம்.

 சமீபகாலமாக உடலில் பசுந்தழைகளையும், பறவைகளின் இறக்கைகளையும் கட்டியிருந்தார். இவ்வாறு பழங்குடியினர் இருப்பது அவர்கள் இறப்புக்கு தயாராவதைக் குறிக்கும். 

அந்த வகையில் கடந்த 23ம் தேதி அந்த கடைசி மனிதர் உயிரிழந்தநிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மனிதருக்கு ஏறக்குறைய 60 வயது இருக்கும்” எனத் தெரிவித்தார்

flood in paksitan: பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம்: ஆயிரம் பேர் உயிரிழப்பு: சர்வதேச உதவி கோருகிறது

பிபிசி செய்திகளின்படி “ அமேசான் காட்டில் பொலிவியா எல்லையில் உள்ள ரோன்டோனியா மாகாணத்தில் உள்ள தனாரு பகுதியில் இந்த பழங்குடியின கடைசி மனிதர் வாழ்ந்துள்ளார். அந்த கடைசி மனிதரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு கொண்டு செல்லப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.

அமேசான் காட்டில் உயிரிழந்த கடைசி மனிதருடன் 6 பேர் வாழ்ந்து வந்தனர். இவர்கள் அனைவரும் ஆக்கிரமிப்பாளர்கள், விவசாயிகளாலும் கொல்லப்பட்டனர். இதனால் தனியாக இருந்த கடைசி மனிதர் மற்றவர்களுடன் சேராமல் காட்டின் அடர்ந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார்.

சர்வைவல் இன்டர்நேஷனல் அமைப்பின் அதிகாரி சாரா ஷெங்கர் கூறுகையில் “ அமேசானில் வாழ்ந்த பூர்வபழங்குடியித்தவர்களில் கடைசி மனிதர் இவர்தான். இவரும் தற்போது உயிரிழந்துவிட்டால் பூர்வகுடிகள் யாரும் இல்லை.

இலங்கையில் பட்டியினியில் வாடும் குழந்தைகள்; தெற்காசிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஐநா!!

 கடந்த சில ஆண்டுகளாக யாருடைய கண்களிலும் படாமல் இந்த மனிதர் தனிமையில் வாழ்ந்துவந்தார். உலகின் தனிமை மனிதராக வலம் வந்தார். இவர் பெயர் என்ன, என்ன மொழி பேசுவார்கள் என ஏதும் தெரியாது. பூர்வ குடிகளில் பலர் இருந்தனர். ஆனால், அதில் பலர் விவசாயிகளாலும், ஆக்கிரமிப்பாளர்களாலும் கொல்லப்பட்டனர்” எனத் தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios