பாலஸ்தீன விடுதலை போராளிகளே... இஸ்ரேல் ஹமாஸ் போர் பற்றி மியா கலிபா கூறிய சர்ச்சை கருத்து
மியா கலீஃபாவுடனான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணியில் இருந்த ஷாபிரோ, உடனடியாக ஒப்பந்தம் கைவிடப்படுவதாக அறிவித்தார்.
முன்னாள் ஆபாசப்பட நடிகை மியா கலீஃபா, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெற்றுவரும் போர் தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். அவரது இந்தக் கருத்தின் விளைவாக, தனக்குக் கிடைத்திருந்த வணிக வாய்ப்புகளையும் இழந்துள்ளார்.
அக்டோபர் 7ஆம் தேதி, சனிக்கிழமை, மியா கலீஃபா ஒரு ட்வீட் பதிவிட்டார். அதில, "பாலஸ்தீனத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் தங்கள் தொலைபேசிகளைத் திருப்பி கிடைமட்டமாக வைத்து படம் எடுக்கவும் என்று யாராவது சொல்ல முடியுமா?" கூறியிருந்தார். கலீஃபாவின் இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் கடுமையான கண்டனங்களைப் பெற்றுள்ளது.
எதிர்ப்பு அதிகமானதால் கலிஃபா தனது ட்வீட்டை டெலிட் செய்துவிட்டார். ஆனால், கனடிய ஒலிபரப்பாளரும் வானொலி தொகுப்பாளருமான டோட் ஷாபிரோவுடனான வணிக ஒப்பந்தத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். மியா கலீஃபாவுடனான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணியில் இருந்த ஷாபிரோ, உடனடியாக ஒப்பந்தம் கைவிடப்படுவதாக அறிவித்தார்.
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் 3,000 பேர் சாவு; இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்து சேர்ந்த அமெரிக்க ஆயுதங்கள்!
கலீஃபாவின் ட்வீட்டுக்கு பதில் அளித்துள்ள ஷாபிரோ, “இது ஒரு பயங்கரமான ட்வீட், மியா கலீஃபா. நீங்கள் உடனடியாக ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுகிறீர்கள்" என்றார். தொடர்ந்து, "இது சுத்த அருவருப்பான கருத்து. அருவருப்புக்கும் அப்பாற்பட்டது. தயவுசெய்து இன்னும் வளர்ந்து சிறந்த மனிதராக மாறுங்கள். நீங்கள் மரணம், வன்புணர்வு, வன்முறை மற்றும் பணயக்கைதிகளாக கடத்திச் செல்லுதல் போன்றவற்றை மன்னிக்கிறீர்கள் என்பது உண்மையிலேயே மோசமானது" என்றும் கூறியுள்ளார்.
"உங்கள் அறியாமையை எந்த வார்த்தைகளாலும் விளக்க முடியாது. குறிப்பாக சோகத்தில் இருக்கும் மனிதர்களுன் ஒன்றுபட்டு இருக்கவேண்டும். நீங்கள் ஒரு சிறந்த மனிதராக மாற நான் பிரார்த்தனை செய்கிறேன். இருப்பினும், உங்களைப் பொறுத்தவரை இது மிகவும் தாமதமானது போல் தெரிகிறது” எனவும் ஷாபிரோ தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செய்திக்கும் மியா கலீஃபா பதிலளித்துள்ளார். “பாலஸ்தீனத்தை ஆதரிப்பதால் தான் எனக்கு வணிக வாய்ப்புகள் பறிபோய்விட்டன என்று சொல்லவேண்டும். ஆனால் நான் வணிகத்தில் சியோனிஸ்டுகளுடன் இருக்கிறார்களா என்று சரிபார்க்காததற்காக என்மீதே மிகவும் கோப்படுகிறேன். அது எனது தவறுதான்" என்று மியா தெரிவித்துள்ளார்.
மேலும், "என் கருத்து எந்த வடிவத்திலும் வன்முறையைத் தூண்டவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் குறிப்பாக சுதந்திரப் போராளிகள் என்று சொன்னேன். ஏனென்றால் பாலஸ்தீனிய குடிமக்கள் ஒவ்வொரு நாளும் சுதந்திரத்திற்காக போராடுகிறார்கள்" என்று தனது ட்வீட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
7 மணிநேரம் பிணக்குவியல் நடுவே கிடந்தேன்: ஹமாஸ் கும்பலிடம் இருந்து தப்பிய பெண் பேட்டி