Asianet News TamilAsianet News Tamil

தொடர் ஆராய்ச்சி சச்ஸஸ்… சூப்பர் !! எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுடிக்கப்பட்டது….

மருந்தே இல்லை என மருத்துவ உலகம் கைவிட்ட நிலையில் எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து  99.9 சதவிகிதம் ஹெச்..வி மற்றும் எய்ட்ஸ் நோயைக் அழிக்கக்கூடியது என்பதால் இது ஒரு பெரும் வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது,

medicine for aids
Author
London, First Published Nov 8, 2018, 8:54 AM IST

எய்ட்ஸ் நோய் என்பது  உடலுறவினாலோ இரத்த தானத்தினாலோகிருமி பாதித்த ஊசிகளின் உபயோகத்தினாலோதாயிடமிருந்து குழந்தைக்கு கருத்தரிப்பு, பிரசவம், பாலூட்டுதல்   போன்றவைகளினாலோ அல்லது வேறெந்த வகையிலாவது பரவுகிறது.

2007- ஆம் ஆண்டு முதல் உலகமெங்கும் 33.2 மில்லியன் மக்கள் எயிட்சோடு வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் 330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில்லியன் மக்கள் இந்நோயினால் கொல்லப்பட்டிருப்பதாகவும் கணிக்கப்பட்டது.

medicine for aids

மரபணு ஆராய்ச்சி 19 ஆம் நுற்றாண்டின் பிற்பகுதியிலோ 20 ஆம் நுற்றாண்டின் முற்பகுதியிலோ மேற்கு- மத்திய ஆப்பிரிக்காவில் எச்..வி. தோன்றியிருக்கக் கூடும் என்று ஒரு ஆராய்ச்சி சொல்லுகிறது.

எயிட்ஸ் முதன்முதலில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில், 1981-ல் கண்டறியப்பட்டது. 1980-களின் முற்பகுதியில் இந்நோய்க்கான காரணம் எச்..வி. எனக் கண்டறியப்பட்டது

medicine for aids

எச்..வி. எயிட்சுக்கான சிகிச்சை, நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த வல்லதாயிருந்தாலும் தற்சமயம் இந்நோய்க்கு தடுப்பூசியோ நிரந்தர தீர்வோ இல்லை. எச்..வி. நோயின் இறப்புவிகிதத்தையும், பாதிப்பு விகிதத்தையும் குறைக்க தகுந்த மருந்துகள் விலையுயர்ந்தனவாகவும், கிடைப்பதற்கு அரியனவாகவும் இருப்பதால் அனைத்து நாடுகளிலும் இது வாடிக்கையாக கிடைப்பதில்லை.

medicine for aids

இன்றைக்கு மருத்துவத் துறையில் அபரிமிதமான தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில்கூட எய்ட்ஸை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்கிற நிலையே நிலவுகிறது.

இந்நிலையில்தான் எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது 99.9 சதவிகிதம் ஹெச்..வி மற்றும் எய்ட்ஸ் நோயைக் அழிக்கக்கூடிய ஒரு மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலைச் சேர்ந்த பயோடெக் நிறுவனமான ஸியோன் மெடிக்கல் `Gammora’ என அழைக்கப்படும் மருந்தைத் தயாரித்துள்ளதுஇந்த மருந்தைக் கொண்டு தொடர்ந்து நான்கு வாரம் சிகிச்சை எடுத்தால் போதும் ஹெச்..வி மற்றும் எய்ட்ஸ் நோயை 99.9 சதவிகிதம் அழித்துவிடலாம் என்று அவர்கள் ஆய்வில் நிரூபித்திருக்கிறார்கள்.

medicine for aids

முதன்முறையாக மனிதர்கள் மேல் சோதனை செய்யப்பட்டது குறித்த ஆய்வு முடிவுகளை அந்த நிறுவனம் தற்போது வெளியிட்டிருக்கிறதுஹெச்..வி. வைரஸ் மூலம் பெறப்பட்ட பெப்டைட்ஸ் [புரதங்கள்] வைத்து, இந்த மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மருந்து, ஹெச்..வி நோய்த் தொற்றை மட்டும் கட்டுப்படுத்தி, அவை செயல்படாத வண்ணம் கட்டுப்படுத்துகிறதுஇது, ஹெச்..வி. உயிரணுக்களைக் கொல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட இந்த ஆய்வின்மூலம், ஹெச்..வி தொற்று நோய்கள் பரவுவதை 99.9 சதவிகிதம் தடுக்க முடியும் என்று அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.  

ஹெச்..வி வைரஸ் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் செல்களைப் பாதித்து அழிக்கும். இது எய்ட்ஸ் என்ற நிலையை அடைய மூன்று முதல் 15 ஆண்டுகள் வரைகூட ஆகும். அதாவது, ஹெச்..வி பாதிப்பின் முற்றிய நிலைதான் எய்ட்ஸ். அது, உயிரைப் பறிக்கக்கூடிய மிக மோசமான நிலை.

ஆனால், ஹெச்..வி தொற்று உள்ள ஒருவரை, எய்ட்ஸ் நிலையை அடையவிடாமல் இந்த மருந்து மூலம் தடுக்க முடியும். இது, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கிய நிலை சிடி-4 செல்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது. பரிசோதனைக்கான மாதிரி ரத்தத்தில் சிடி-4 எண்ணிக்கையைக்கொண்டு ஹெச்..வி., எய்ட்ஸ் நிலையை அறிந்துகொள்ளலாம் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

medicine for aids

இது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் இதனால் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் உய்ர் பெற வாப்பு உள்ளதாகவும் தெரிகிறது. இனி எய்ட்ஸ் நோயாளிகள் ஒதுக்கி வைக்கப்பட மாட்டார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios